About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

April 17, 2012

ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - அனைத்து பள்ளி ஆசிரியர்களின் முழு விவரங்கள் சேகரித்தல்.

வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 1696 / அ3 / 2012, நாள். 14.04.2012
ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - அனைத்து வகை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க ஏதுவாக அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்கள் முழு விவரங்களை CD மற்றும் FORMAT - III உடன் அனைத்து ஆசிரியர்களின் ஏப்ரல் மாத வருகைப் பதிவேட்டின் நகல் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் கால அட்டவணை நகல் ஒன்றையும் ஒப்படைக்க வேண்டும்.
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 1696 / அ3 / 2012, நாள். 14.04.2012 பதிவிறக்கம் செய்ய...
TO DOWNLOAD FORMAT III - EXCEL SHEET CLICK HERE....

டி.இ.டி., விண்ணப்பங்கள் சென்னையில் பரிசீலனை

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், மாநிலம் முழுவதிலும் இருந்து, சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு வரப்படுகின்றன. டி.இ.டி., தேர்வுக்காக 12 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆனபோதும், 8 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே பூர்த்தியான நிலையில் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டங்களில் இருந்து, இந்த விண்ணப்பங்கள், சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வரத் துவங்கியுள்ளன.
விண்ணப்பங்கள் அனைத்தும், இந்த மையத்தில் வைத்து, இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள், பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆகிய இரண்டும் பிரிக்கப்படுகின்றன. பின், விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இதன் விவரங்களை, "ஸ்கேன்' செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன. ஜூன் 3ம் தேதி நடக்கும் தேர்வு, தள்ளிப்போகும் என ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ள நிலையில், இது குறித்த அறிவிப்பு, நாளை நடைபெறும் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையில் எதிர்பார்க்கலாம். தேர்வு தள்ளி வைக்கப்படாத பட்சத்தில், மே மூன்றாவது வாரத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்' அனுப்பும் பணி நடைபெறும்.

எம்.எஸ்சி. அல்லது எம்.சி.ஏ. படிக்கலாமா?

பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு எம்.சி.ஏ. செல்வதே பொதுவாக நல்ல வாய்ப்புகளைத் தருவதாக இருக்கிறது. ஏனெனில் பெரும்பாலான நிறுவனங்கள் எம்.எஸ்சியை விட எம்.சி.ஏ. படித்திருப்பவரைத் தான் விரும்புகின்றன. எனினும் வெறும் எம்.சி.ஏ. மட்டுமே இன்றைய சூழலுக்குப் பொருந்துவதில்லை.

வெப் டெவலப்மென்ட் படிப்புகளான ஜாவா, ஆரக்கிள், வி.பி.நெட்., சி#, ஏஎஸ்பி.நெட். போன்றவற்றில் சிலவற்றை எம்.சி.ஏ. படிக்கும் போதே உங்களது மகள் படிக்கலாம். இது சாப்ட்வேர் டெவலப்மென்ட் துறைக்குச் செல்ல அவருக்கு உதவும். நெட்வொர்க்கிங் துறைக்குச் செல்ல அவர் விரும்பினால் அதற்கேற்ப எம்.சி.எஸ்.இ., சி.சி.என்.ஏ. போன்றவற்றில் சிறப்புப் பயிற்சியைப் பெறலாம். பணியில் சேர்ந்து சில ஆண்டுகளில் அவர் ஐ.டி. முக்கியப் பாடமாகக் கொண்டு எம்.பி.ஏ. படிப்பையும் மேற்கொள்ளலாம். இது இப்போது தொலை தூர முறையில் கிடைக்கத் துவங்கியுள்ளது.

April 5, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படுவார்கள் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

"ஒரே ஒரு தேர்வு தான்; தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில் அறிவித்தார்.


புதிய அரசாணை விவரம்:கொள்கை மாற்றம் குறித்து, கடந்த 28ம் தேதியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:

April 4, 2012

பள்ளிசெல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி SSA மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந. க.எண். 390 / அ 2 / ப செ கு / அ க இ / 2011 நாள். 14.03.2012.
அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2012 - 13 ஆம் ஆண்டில் பள்ளி செல்ல குழந்தைகள் மற்றும் மாற்று திறன் கொண்ட குழந்தைகள் - கணக்கெடுப்பு மற்றும் ஆரம்பக்கல்வி பதிவேடு புதுப்பித்தல் - சார்பு.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறும் கடைசி நாள் 12-ந் தேதி வரை நீட்டிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளாக 4.4.2012 (இன்று) என குறிப்பிடப்பட்டது. தற்போது பல்வேறு விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாளை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வந்ததை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விண்ணப்பதாரர்களின் நலன் கருதி ஒரு வாரம் நீட்டிக்க ஆணை வழங்கியுள்ளார்.

அதன் அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

April 2, 2012

நாடு முழுவதும் ஏப். 20ல் ஜாதி வாரி கணக்கெடுப்பு துவக்கம்


நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு ஏப்ரல் 20ம் தேதி தொடங்குகிறது. இதற்காக பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கையடக்க கணினி வழங்கப்படுகிறது. கணக்கெடுப்பு பணிக்காக அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக, பொருளாதார, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 20ம் தேதி முதல் நாடு முழுவதும் கணக்கெடுப்பு துவங்குகிறது. 40 நாள் நடைபெற உள்ள கணக்கெடுப்பு பணியில் கணக்கெடுப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், மாஸ்டர் டிரெய்னர்ஸ் நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னையில் பயிற்சி 
மாஸ்டர் டிரெய்னர்களுக்கு சென்னை மறைமலை நகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்படும். பின்னர். மாஸ்டர் டிரெய்னர்ஸ் கணக்கெடுப்பாளர்கள், கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். கணக்கெடுப்பில் குடியிருப்பாளர்களின் அனைத்து விவரங்களையும் பெறும் வகையில், கேள்வி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புக்கு செல்வோருக்கு உதவியாக கையடக்க கம்ப்யூட்டருடன் (டேப்ளட் பிசி) அதை இயக்கவும் உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர். கணக்கெடுப்பாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொதுமக்கள் அளிக்கும் பதில்களை உதவியாளர்கள் உடனுக்குடன் பதிவு செய்வர்.

காகிதத்தில் குறிக்க வேண்டியதில்லை. இந்த பதிவுகள் அனைத்தும் உடனே சென்னை மற்றும் டெல்லியில் உள்ள தலைமை கணக்கெடுப்பு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்காக தேசிய தகவல் மையம் சார்பில் இணையதள வசதியும் செய்யப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுத்த பின் அடுத்த நாள் கண்காணிப்பாளர்கள் அப்பகுதிக்கு சென்று விவரங்களை சரிபார்ப்பார்கள். கணக்கெடுப்பு நடத்திய வீடுகளின் முகப்பில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். எனவே கணக்கெடுப்பு அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தினமும் பணிக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.

ரூ.15000 சம்பளம் 

கணக்கெடுப்புக்குத் தேவையான கையடக்க கம்ப்யூட்டர், ஸ்டிக்கர், அட்டை உள்ளிட்ட டூல் கிட்ஸ் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான பணி நியமன உத்தரவு ஆகியவை வரும் 15ம் தேதி வழங்கப்படும். கடந்தாண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் இக்கணக்கெடுப்பிற்கு தேர்வு செய்யப்படுகின்றனர். 40 தினங்களில் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்படும் என தெரிகிறது. வீடுகளில் வசிப்பவர்கள் கூறும் தகவலின் அடிப்படையில் சாதி, பொருளாதார கணக்கெடுப்பு விவரங்கள் தெரிய வரும். இதனடிப்படையில் மக்களின் பொருளாதார வசதியை அறிந்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்க உதவும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.