About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

May 9, 2012

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள், 11ம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூன் முதல் வாரத்தில், தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
ஏப்ரல் 4 முதல், 23ம் தேதி வரை நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள், கடந்த 26ம் தேதியில் இருந்து, 66 மையங்களில் நடந்து வருகின்றன. 40 ஆயிரம் ஆசிரியர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், 11ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வழக்கமாக மே இரண்டாவது வாரத்தில் வெளியாகும். ஆனால், இம்முறை பிளஸ் 2 தேர்வு முடிவுகளே தள்ளிப் போயிருப்பதால், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் 20 நாட்கள் வரை தள்ளிப்போகின்றன.
இந்த ஆண்டு, ஜூன் முதல் வாரத்தில் தான் முடிவுகள் வெளியாகும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூன் முதல் தேதியன்றே பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பிளஸ் 1 சேர்க்கை மட்டும் தாமதமாகவே நடைபெற உள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை6

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை5

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை 4

சாதி, வருமான, இருப்பிட சான்றுகளை 6ம் வகுப்பிலேயே பெறலாம்

சென்னை: எதிர்கால சிரமங்களைத் தவிர்க்க, 6ம் வகுப்பிலேயே மாணவர்களுக்கு சாதி, இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக, சட்டசபையில் முதல்வர் தெரிவித்ததாவது: பள்ளி மாணவர்கள் அரசு விடுதிகளில் தங்கிப் பயில்வதற்கும், பல்வேறு வகையான உதவித் தொகைகளைப் பெறுவதற்கும், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கும், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் போன்றவை தேவைப்படுகின்றன.
இத்தகைய சான்றிதழ்களை தேவையான நேரத்தில் பெறுகையில், மாணவர்களுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, அவர்களின் 6ம் வகுப்பிலேயே, இத்தகைய சான்றிதழ்களை பெறும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படும்.
இதன்மூலம், மாணவர்கள் அந்த ஆண்டிலேயே மேற்கூறிய சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய திட்டத்தின் மூலம், 6ம் வகுப்பில் படிக்கும் சுமார் 12 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

ஜூலை 2ம் தேதி மருத்துவக் கல்வி கலந்தாய்வு.

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு, ஜூலை 2ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழுவின் செயலர், விரைவில் நியமிக்கப்படுவார் என, சுகாதாரத்துறைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கூறினார்.

பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு - ஜூலை 2-ம் தேதி தொடக்கம்.


பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது.
எனினும் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விரும்பும் பொதுப் பிரிவு கலந்தாய்வு, வழக்கம்போல் எம்.பி.பி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி தொடங்கி முடிந்த பிறகு, ஜூலை 9-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.