!-end>!-local>
February 29, 2012
2895 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
February 27, 2012
சீனாவில் உலகின் மிகப் பெரிய விமான நிலையம்
பீஜிங்: அமெரிக்காவின் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தை தோற்கடிக்கும் வகையில், உலகின் மிகப் பெரிய விமான நிலையத்தை நிர்மாணிக்க, சீனா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் உள்ள ஹார்ட்ஸ்பீல்டு - ஜாக்சன் சர்வதேச விமான நிலையம்தான், விமானப் போக்குவரத்தில் உலகின் மிகப் பெரிய விமான நிலையம் என கருதப்படுகிறது. இந்நிலையில், அதையும் தோற்கடிக்கும் வகையில் பீஜிங்கின் தென் கிழக்கில், உலகின் மிகப் பெரிய சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து நிலையம் ஒன்றை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. மொத்தம் 15 பில்லியன் டாலர் செலவில் அமையக் கூடிய இந்த நிலையம், பீஜிங்கிற்கும், ஹேபெய் மாகாணத்தின் லாங்பாங் நகருக்கும் இடையில் உள்ள பகுதியில் நிறுவப்படலாம் எனத் தெரிகிறது
ஆஸ்கர் விருதுகள் : சிறந்த வெளிநாட்டுப்படமாக ஈரான் படம் தேர்வு
லாஸ் ஏஞ்சல்ஸ் : 84 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், சிறந்த வெளிநாட்டுப் படமாக, ஈரான் நாட்டின் “ தி செபரேசன்” படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தி ஹூகோ திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு, கலை, சவுண்ட் மிக்சிங், விசுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. 2010ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், ஹாலிவுட் இயக்குனர் டேவிட் பாய்ல், மும்பை சேரிப்பகுதி பையனை வைத்து எடுத்த ஸ்லம்டாக் மில்லியனர்ஸ் படம், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது
February 26, 2012
மிகக் குறைந்த விலை டேப்லெட் கணினிகள் BSNL வெளியிட்டது பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்ய
பிரபல டெலிகாம் நிறுவனமான BSNL மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை வெளியிட்டுள்ளது. BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் இணைந்து வெறும் Rs.3250 விலையில் இந்த மலிவு விலை கணினிகளை வெளியிட்டுள்ளது. உலகிலேயே மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை ஆகாஷ் நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டது. சில பிரச்சினைகளால் இந்த கணினிகள் வருவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. ஆகவே ஆகாஷ் கணினிகளுக்கு முன்பதிவு செய்து காத்திருக்காமல் அதே விலை உள்ள புதிய T-PAD IS701R கணினிகளை முன்பதிவு செய்து பெற்று கொள்ளுங்கள். மார்ச் 5 இருந்து இந்த கணினிகள் விற்பனைக்கு வருகின்றன.
ஏப்ரலில் ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு - ரூ.5 ஆயிரம் உழைப்பூதியம்
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரலில் துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே வருவாய்த்துறை மூலம் சமூகப்பொருளாதார ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தற்போது நகராட்சி, மாநகராட்சி அளவில் தனியாகவும், ஊராட்சி ஒன்றியங்களில் பி.டி.ஓ.,க்கள் தலைமையிலும், பேரூராட்சிகளில் நிர்வாக அலுவலர்கள் தலைமையிலும் கணக்கெடுப்பு நடக்க உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட அடிப்படையில் கணக்கெடுப்பு பகுதிகள் பிரிக்கப்பட்டு, ஏப்ரல் முதல் பணிகள் துவங்குகின்றன.
ஒவ்வொரு கணக்கெடுப்பாளரும், 150 வீடுகள் வரை கணக்கெடுக்க உள்ளனர். 40 நாட்கள் நடக்கும் இப்பணிக்காக ஒரு ஊழியருக்கு ரூ.5 ஆயிரம் ரூபாய் உழைப்பூதியம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே வருவாய்த்துறை மூலம் சமூகப்பொருளாதார ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தற்போது நகராட்சி, மாநகராட்சி அளவில் தனியாகவும், ஊராட்சி ஒன்றியங்களில் பி.டி.ஓ.,க்கள் தலைமையிலும், பேரூராட்சிகளில் நிர்வாக அலுவலர்கள் தலைமையிலும் கணக்கெடுப்பு நடக்க உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட அடிப்படையில் கணக்கெடுப்பு பகுதிகள் பிரிக்கப்பட்டு, ஏப்ரல் முதல் பணிகள் துவங்குகின்றன.
ஒவ்வொரு கணக்கெடுப்பாளரும், 150 வீடுகள் வரை கணக்கெடுக்க உள்ளனர். 40 நாட்கள் நடக்கும் இப்பணிக்காக ஒரு ஊழியருக்கு ரூ.5 ஆயிரம் ரூபாய் உழைப்பூதியம் வழங்கப்படுகிறது.
February 24, 2012
பி.ஏ. ஆங்கிலம் (சி.ஏ) மாணவர்கள் ஆட்சியரிடம் மனு
நாமக்கல், பிப். 20: ஆங்கிலம் கணினி செயலாக்கம் படிப்பை ஆங்கில பட்டப்படிப்புக்கு இணையாக கருத வேண்டும் என வலியுறுத்தி தனியார் கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.நாமக்கல் மாவட்டம், வெப்படை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ கந்தன் கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் (சி.ஏ.) பயிலும் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆட்சியர் ஜெ.குமரகுருபரனைச் சந்தித்து மனு அளித்தனர்.
Subscribe to:
Posts (Atom)

