About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

April 2, 2012

நாடு முழுவதும் ஏப். 20ல் ஜாதி வாரி கணக்கெடுப்பு துவக்கம்


நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு ஏப்ரல் 20ம் தேதி தொடங்குகிறது. இதற்காக பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு கையடக்க கணினி வழங்கப்படுகிறது. கணக்கெடுப்பு பணிக்காக அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அரசு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக, பொருளாதார, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 20ம் தேதி முதல் நாடு முழுவதும் கணக்கெடுப்பு துவங்குகிறது. 40 நாள் நடைபெற உள்ள கணக்கெடுப்பு பணியில் கணக்கெடுப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், மாஸ்டர் டிரெய்னர்ஸ் நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னையில் பயிற்சி 
மாஸ்டர் டிரெய்னர்களுக்கு சென்னை மறைமலை நகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்படும். பின்னர். மாஸ்டர் டிரெய்னர்ஸ் கணக்கெடுப்பாளர்கள், கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். கணக்கெடுப்பில் குடியிருப்பாளர்களின் அனைத்து விவரங்களையும் பெறும் வகையில், கேள்வி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புக்கு செல்வோருக்கு உதவியாக கையடக்க கம்ப்யூட்டருடன் (டேப்ளட் பிசி) அதை இயக்கவும் உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர். கணக்கெடுப்பாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொதுமக்கள் அளிக்கும் பதில்களை உதவியாளர்கள் உடனுக்குடன் பதிவு செய்வர்.

காகிதத்தில் குறிக்க வேண்டியதில்லை. இந்த பதிவுகள் அனைத்தும் உடனே சென்னை மற்றும் டெல்லியில் உள்ள தலைமை கணக்கெடுப்பு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்காக தேசிய தகவல் மையம் சார்பில் இணையதள வசதியும் செய்யப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுத்த பின் அடுத்த நாள் கண்காணிப்பாளர்கள் அப்பகுதிக்கு சென்று விவரங்களை சரிபார்ப்பார்கள். கணக்கெடுப்பு நடத்திய வீடுகளின் முகப்பில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். எனவே கணக்கெடுப்பு அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தினமும் பணிக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.

ரூ.15000 சம்பளம் 

கணக்கெடுப்புக்குத் தேவையான கையடக்க கம்ப்யூட்டர், ஸ்டிக்கர், அட்டை உள்ளிட்ட டூல் கிட்ஸ் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான பணி நியமன உத்தரவு ஆகியவை வரும் 15ம் தேதி வழங்கப்படும். கடந்தாண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் இக்கணக்கெடுப்பிற்கு தேர்வு செய்யப்படுகின்றனர். 40 தினங்களில் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்படும் என தெரிகிறது. வீடுகளில் வசிப்பவர்கள் கூறும் தகவலின் அடிப்படையில் சாதி, பொருளாதார கணக்கெடுப்பு விவரங்கள் தெரிய வரும். இதனடிப்படையில் மக்களின் பொருளாதார வசதியை அறிந்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்க உதவும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

March 31, 2012

ஆசிரியர் பயிற்சித் தேர்வு முடிவுகள் நாளை வெளீயீடு.

ஆசிரியர் பயிற்சி, இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், நாளை மார்ச் 31ம் தேதி வெளியிடப்படும்,&'&' என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு தேர்வை, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர்.
இதற்கான மதிப்பெண் சான்றிதழ்கள் 31ம் தேதி, அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வெழுதிய தனித்தேர்வு மாணவர்களுக்கான சான்றிதழ்கள், அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் வழங்கப்படும். அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பட்டயச் சான்றிதழ் கிடைக்கவில்லை எனில், 4ம் தேதிக்குள் தேர்வுத்துறை இயக்குனரகத்தை அணுகலாம்.
மறு கூட்டலுக்கான விண்ணப்பங்களை, அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் இருந்து, 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 4ம் தேதிக்குள், சம்பந்தபட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும் இவ்வாறு வசுந்தரா கூறியுள்ளார்.

ஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம்: இனி ஒரே தேர்வு தான்!

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

"ஒரே ஒரு தேர்வு தான்; தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆசிரியர் தேர்வு முறை கொள்கையில், தமிழக அரசு திடீரென மாற்றம் செய்துள்ளது, தேர்வு எழுத உள்ளவர்களை, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.இதற்கு முன் வரை, "இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருமே, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும்; இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், மற்றொரு போட்டித் தேர்வை நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் என, பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வு: 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் எழுதுகின்றனர். விண்ணப்பம் வாங்க கூட்டம் அலைமோதுவதைத் தொடர்ந்து 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பதை மேலும் 8 நாட்கள் நீட்டித்து 12ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

March 27, 2012

Trimester I Term Syllabus for I to VIII Std.

Click Here to View the following Subjects of Trimester I Term Syllabus for I to VIII Std.
English medium
Tamil medium

பள்ளிக் கல்விக்கு ரூ.1,219 கோடி கூடுதல் நிதி: திட்டப் பணிகளுக்கு ரூ.1,900 கோடி?

பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு, கடந்த நிதியாண்டை விட, 1,219.16 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த நிதி ஒதுக்கீட்டில், திட்டங்களுக்கு மட்டும், 1,900 கோடி ரூபாய் செலவழிக்கப் படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, ஆண்டுதோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, முந்தைய தி.மு.க., ஆட்சியில் தான், 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியது. அதன்பின், இந்த ஆட்சியிலும், நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

March 26, 2012

தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு சலுகைகள் எப்போது?

  • ஒரே கல்வித் தகுதி, ஒரே சம்பளம், ஒரே பணி, ஒரே தேர்வு முறை என அனைத்தும் ஒன்றாக இருந்தும், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உள்ள பதவி உயர்வு வாய்ப்புகள், தொடக்க கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சுத்தமாக இல்லை.