About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

June 26, 2012

தலைமை ஆசிரியர்களும் பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி இயக்ககம்

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்கள் பட்டம் பெற்றுள்ள பாடத்தில், எட்டு பாட வேளைகளில் கற்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், வாரத்திற்கு 10 பாட வேளைகள் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் பலர், தங்களது அலுவலகப் பணிகளை மட்டும் பார்த்துவிட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை செய்வதில்லை.

9 கள்ளர் பள்ளிகளை தரம் உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவு.

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இன்று 25.06.2012 நடைபெறவுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

TNPSC - TENTATIVE ANSWER KEY FOR EXAMINATIONS

தனியார் கல்லூரிகளில் பி.எட் : கல்விக் கட்டணம் விரைவில் அறிவிப்பு

தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கான கல்விக் கட்டணம் குறித்து நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளும், 647 தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு ஏறத்தாழ 2,500 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன.

May 30, 2012

2012 - 2013 SSAன் வின் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம் - இயக்குனரின் கடிதம்

இடைநிலைக் கல்வி - அரசு உதவி பெறும் பள்ளி - முதன்மை பாடத்தினை கொண்டு பி.எட்., முடித்தவர்களுக்கு மட்டும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு - RTI கடிதம் மூலம் தெளிவுரை.

பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) செயல்முறைகள், சென்னை - 06                            
ந.க.எண். 75417 / டி2 / இ2 / 2012, நாள்.   .12.2011
     

பொருள் :
இடைநிலைக் கல்வி - உதவி பெறும் பள்ளி - தகவல்               அறியும் உரிமைச் சட்டம் - 2005-ன் கீழ் விபரங்கள் கோருதல் சார்பு.
பார்வை :
உதவிப்பதிவாளர், தமிழ்நாடு தகவல் ஆணையம் தேனாம்பேட்டை அவர்களின் ஆணை எண்.26088 / C / 2011, நாள். 28.08.2011
                                                                      **************
      பார்வையில் காணும் கடிதத்தின் வாயிலாக  திருமதி. ஜீவாகமலக்கண்ணன் என்பார் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி கோரியுள்ள தகவல்களுக்கு பின்வருமாறு விபரம் அளிக்கப்படுகிறது.