January 13, 2012

பேஸ்புக்,கூகுள் வலைதளங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சமூக வலைதளமான பேஸ்புக், மற்றும் கூகுள் இணையதளங்களில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இதுபற்றி நீதிபதி கூறும் போது, வலைதளங்கள் அவற்றில் உள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும். அவ்வாறு உடனடியாக செய்யவில்லை என்றால் சீனாவைபோல பேஸ்புக், கூகுள் இணைய தளங்களை தடை செய்ய நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசு பள்ளிக்கூடங்களில் 16,549 காலி பணி இடங்களுக்கான பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு 31-ந்தேதிக்குள் பணி நியமன ஆணை பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வேலையில் சேர உத்தரவு

சென்னை, ஜன.13-

அரசு பள்ளிக்கூடங்களில் புதிதாக நியமிக்கப்பட உள்ள 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு 31-ந் தேதிக்குள் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் முகமது அஸ்லாம் உத்தரவிட்டுள்ளார். பணிநியமன ஆணை பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வேலையில் சேர வேண்டும்.

16,549 காலி இடங்கள்
தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) கீழ் அரசு பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக 16,549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தையல், ஓவியம், இசை, உடற்கல்வி, கம்ப்ïட்டர் உள்பட பல்வேறு பாடங்களைச் சேர்ந்த இந்த ஆசிரியர்கள் வாரத்தில் 3 நாட்கள் (தினசரி 3 மணி நேரம்) பணியாற்ற வேண்டும். அவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

January 10, 2012

கள்ள நோட்டை ஒழிக்க பிளாஸ்டிக் கரன்சிகள்:

 
பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுக்களை கொண்டு வந்து புழக்கத்தில் விட்ட 3 பேரை மத்திய புலனாய்வு அமைப்பினர் சென்னையில் கைது செய்தனர்.  
 
ஒரு நாட்டின் ரூபாய் நோட்டுகளை போலியாக அச்சடித்து, சம்பந்தப்பட்ட நாடுகளில் புழக்கத்தில் விடுவதை தொழிலாக செய்து வரும் சர்வதேச கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் இந்த மூவரும். அந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து அந்த நாட்டின் ஸ்திரதன்மையை ஆட்டம் காணச் செய்ய வேண்டும் என்பதுதான் இந்த கும்பலின் நோக்கம்.
 
எதிரி நாடுகளை மறைமுகமாக பழிவாங்க இந்த கும்பலை சில நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன.  சென்னையில் கைது செய்யப்பட்ட கள்ளநோட்டு கும்பலின் பின்னணியில் இருந்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. செயல்பட்டிருப்பது விசாரணை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட 3 பேரும் கள்ள நோட்டு மாற்றும் கும்பலின் ஏஜெண்டுகளாக செயல்பட்டவர்கள். இவர்களிடம் இருந்து சிறிய அளவிலான கள்ள நோட்டுகளே கைப்பற்றப்பட்டுள்ளன.