February 27, 2012

ஆஸ்கர் விருதுகள் : சிறந்த வெளிநாட்டுப்படமாக ஈரான் படம் தேர்வு

லாஸ் ஏஞ்சல்ஸ் : 84 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், சிறந்த வெளிநாட்டுப் படமாக, ஈரான் நாட்டின் “ தி செபரேசன்” படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தி ஹூகோ திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு, கலை, சவுண்ட் மிக்சிங், விசுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. 2010ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், ஹாலிவுட் இயக்குனர் டேவிட் பாய்ல், மும்பை சேரிப்பகுதி பையனை வைத்து எடுத்த ஸ்லம்டாக் மில்லியனர்ஸ் படம், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment