February 21, 2012

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்

இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் 1.4.2010-ம் ஆண்டுக்கு பின்னர் சேர்ந்தவர்களும், வேலை தேடி காத்திருப்போருக்கும் ஆசிரியர் ஆவதற்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் மே மாத இறுதியில் நடத்த முடிவு செய்துள்ளது.


அதற்கான பாடத்திட்டங்களை தயாரித்து ஒப்புதலுக்கு அரசுக்கு அனுப்பி இருந்தது. இந்த பாடத்திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் பாடத்திட்ட விவரம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. தேர்வுக்கான விண்ணப்பபடிவங்கள் அச்சிடும்பணி நடைபெற்று வருகிறது

No comments:

Post a Comment