April 20, 2012

தொடக்கக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு 2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல்

தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி1 / 2012, நாள். 19.04.2012.

2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் வழங்குவதற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் இருக்கும் பொருட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலக விளம்பர பலகையில் ஒட்டி அதன் மூலம் ஆசிரியர்களிடம் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக கீழ்காணும் அறிவுரைகள் வழங்கபடுகின்றன.
*30.04.2012 க்குள் ஆசிரியர்கள் தங்களது மாறுதல் விண்ணப்பங்கள் உரிய வழியில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
*05.05.2012 அன்று அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களிடமிருந்து விண்ணபங்களை பெற்று 07.05.2012 க்குள் சரிப்பார்த்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஏ, பி மற்றும் சி பதிவேடுகள் தயார் செய்ய வேண்டும்.
*10.05.2012 அன்று மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணபங்களை பரிசீலித்து சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
*மேற்கூறிய அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொண்டு 2012 - 2013 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் மாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்த பணியினை முடித்து தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
*மாறுதல் சார்பான அரசாணை பெறப்பட்ட உடன் விரிவான அறிவுரைகள் வழங்கப்படுமென அறிவிக்கப்படுகிறது. 

தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி1 / 2012, நாள். 19.04.2012 மற்றும் மாதிரிப் படிவம் பதிவிறக்கம் செய்ய....


  1. பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம்.
  2. தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம்.
 

No comments:

Post a Comment