May 21, 2012

தொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

முன்னுரிமை பட்டியல், பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் அனைத்து ஒன்றியங்களிலும் சரியாக தயாரிக்கப்பட வேண்டும் என்றும்,
தயாரிக்கப்பட்ட பட்டியல்களை ஒன்றியம் மாற்றி சரிப்பார்க்கப்பட்டு, சரியாக உள்ளதா என ஆய்வு செய்த பிறகு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற்று இயக்ககத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும்,
தொடக்கக் கல்வித் துறையை சார்ந்த  ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரோட்டில் நடந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆய்வு கூட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளதாக கல்வித்துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment