பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை
(2010-11) பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1-ம் தேதி சான்றிதழ்
சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களை (2010-11) நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன்
24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களின்
எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு
வழங்கப்படுகிறது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்கள் ஜூலை 1-ம்
தேதி மீண்டும் கலந்துகொள்ளலாம்.
இதற்கான அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லையென்றாலும், ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலை நகல் எடுத்தும்
கலந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
thank you sir, for adding the link of "b.ed., teachers" blog in your site.
ReplyDeletePANDIAN.E -8148917745
Best bank coaching centers in bangalore
ReplyDelete.www.miqclasses.com