June 27, 2012

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை (2010-11) பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 (TNTET 2012) - அனைத்து மாணவர்களின் தேர்வு மைய விவரம்- Tamil Nadu Teachers Eligiblity Test 2012 - Venue wise Individual Query for the Candidate

    Tamil Nadu Teacher Eligiblity Test 2012

 I. List of Admitted candidates                                      -        656088

Date of Examination: 12.07.2012 Thursday
Paper I Timing: 10:30 A.M to 12 Noon

Paper II Timing: 02:30 P.M to 04:00 P.M
Paper Both : (Paper I Timing and Paper II Timing)


தலைமை ஆசிரியர்களும் பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி இயக்ககம்

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்கள் பட்டம் பெற்றுள்ள பாடத்தில், எட்டு பாட வேளைகளில் கற்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், வாரத்திற்கு 10 பாட வேளைகள் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் பலர், தங்களது அலுவலகப் பணிகளை மட்டும் பார்த்துவிட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை செய்வதில்லை.

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இன்று 25.06.2012 நடைபெறவுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

தனியார் கல்லூரிகளில் பி.எட் : கல்விக் கட்டணம் விரைவில் அறிவிப்பு

தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கான கல்விக் கட்டணம் குறித்து நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளும், 647 தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு ஏறத்தாழ 2,500 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன.