About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

December 10, 2011

கணினியில் ஏற்படும் பிரச்சனைகளை சேமித்து வைப்பதற்கு


உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கணினிகளில் அதிகமாக பயன்படுத்தகூடிய இயங்குதளம் windows இயங்குதளம் தான். அந்த நிறுவனம் இப்பொழுது தனது புதிய பதிப்பான windows 8ன் சோதனைப்  பதிப்பை வெளியிட்டது.

இந்த நிறுவனத்தின் விண்டோஸ் 7 பெரிய வரவேற்பை பெற்றதும் இல்லாமல் வருமானத்தையும் அதிக அளவில் ஈட்டித் தந்துள்ளது. இந்த விண்டோஸ் 7 பதிப்பில் ஏராளமான வசதிகள் மறைந்துள்ளது. விண்டோஸ்7ல் problem recorder என்ற ஒரு புதிய வசதி இருக்கிறது. இதன் மூலம் நாம் நம் கணினியில் வரும் பிரச்சனைகளைப் பதிவு செய்து அதனை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ, கணினி சரி செய்பவர்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த நபர்களுக்கோ அனுப்பி அந்த மென்பொருளில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

இந்த மென்பொருள் ஒவ்வொரு திரையையும் பதிந்து வைக்கிறது. அதுமட்டுமல்ல நமது சுட்டியின் ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு கிளிக்யையும் பதிந்து வைக்கிறது.இதன் மூலம் நீங்கள் எங்கே என்ன செய்தீர்கள் என்பதை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். இதனை இயக்குவதும் மிகவும் சுலபமானது.

இதனை திறப்பதற்கு START மெனுவில் கிளிக் செய்து அதில் RUN-ஐ அழுத்துங்கள். அதில் PSR என தட்டச்சு செய்யுங்கள் அல்லது START மெனுவில் உள்ள SEARCH என்பதில் PSR என தட்டச்சு செய்யுங்கள். இதனைப் பயன்படுத்த முதலில் அந்த மென்பொருளை திறந்து கொள்ளுங்கள். பின்னர் வரும் windowவில் START RECORD என்ற பொத்தானை அழுத்துங்கள். பின்னர் எந்த மென்பொருள் செயல்படவில்லையோ அதனைத் திறந்து நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்.

நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் சுட்டியினை அழுத்தும் போதும் இந்த மென்பொருள் screen SNAP SHOT எடுத்து வைக்கும். முடிந்த உடன் STOP RECORD என்ற பொத்தனை அழுத்துங்கள். பின்னர் அது கோப்பை எங்கு சேமிக்க வேண்டுமென்று கேட்கும். அதனை தேர்வு செய்து SAVE பொத்தனை அழுத்துங்கள். அவ்வளவு தான் நீங்கள் இந்த கோப்பை யாருக்கு வேண்டுமோ அனுப்பிக்கொள்ளுங்கள்.

இந்த மென்பொருள் உங்கள் screenகளை பதிந்து MHTML கோப்பாக மாற்றிவைக்கும். அதில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதும் படிப்படியாக சேமிக்கப்பட்டிருக்கும்.

1 comment:

Guru said...

very good information sir