About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

March 31, 2012

ஆசிரியர் பயிற்சித் தேர்வு முடிவுகள் நாளை வெளீயீடு.

ஆசிரியர் பயிற்சி, இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், நாளை மார்ச் 31ம் தேதி வெளியிடப்படும்,&'&' என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு தேர்வை, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர்.
இதற்கான மதிப்பெண் சான்றிதழ்கள் 31ம் தேதி, அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வெழுதிய தனித்தேர்வு மாணவர்களுக்கான சான்றிதழ்கள், அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் வழங்கப்படும். அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பட்டயச் சான்றிதழ் கிடைக்கவில்லை எனில், 4ம் தேதிக்குள் தேர்வுத்துறை இயக்குனரகத்தை அணுகலாம்.
மறு கூட்டலுக்கான விண்ணப்பங்களை, அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் இருந்து, 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 4ம் தேதிக்குள், சம்பந்தபட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும் இவ்வாறு வசுந்தரா கூறியுள்ளார்.

ஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம்: இனி ஒரே தேர்வு தான்!

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

"ஒரே ஒரு தேர்வு தான்; தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆசிரியர் தேர்வு முறை கொள்கையில், தமிழக அரசு திடீரென மாற்றம் செய்துள்ளது, தேர்வு எழுத உள்ளவர்களை, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.இதற்கு முன் வரை, "இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருமே, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும்; இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், மற்றொரு போட்டித் தேர்வை நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் என, பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வு: 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் எழுதுகின்றனர். விண்ணப்பம் வாங்க கூட்டம் அலைமோதுவதைத் தொடர்ந்து 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பதை மேலும் 8 நாட்கள் நீட்டித்து 12ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

March 27, 2012

Trimester I Term Syllabus for I to VIII Std.

Click Here to View the following Subjects of Trimester I Term Syllabus for I to VIII Std.
English medium
Tamil medium

பள்ளிக் கல்விக்கு ரூ.1,219 கோடி கூடுதல் நிதி: திட்டப் பணிகளுக்கு ரூ.1,900 கோடி?

பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு, கடந்த நிதியாண்டை விட, 1,219.16 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த நிதி ஒதுக்கீட்டில், திட்டங்களுக்கு மட்டும், 1,900 கோடி ரூபாய் செலவழிக்கப் படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, ஆண்டுதோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, முந்தைய தி.மு.க., ஆட்சியில் தான், 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியது. அதன்பின், இந்த ஆட்சியிலும், நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

March 26, 2012

தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு சலுகைகள் எப்போது?

  • ஒரே கல்வித் தகுதி, ஒரே சம்பளம், ஒரே பணி, ஒரே தேர்வு முறை என அனைத்தும் ஒன்றாக இருந்தும், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உள்ள பதவி உயர்வு வாய்ப்புகள், தொடக்க கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சுத்தமாக இல்லை.

1040 இடைநிலை ஆசிரியர் பணியிடம் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியராக நிலை உயர்த்தி முதல்வர் உத்தரவு.

  • தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாணவர்கள் இடைநிற்றல் இன்றி கல்வி பயிலுவதற்கு ஏதுவாக பள்ளிகள் அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே இருக்கும் பொருட்டு, தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார்.
  • நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால், நிலையிறக்கம் செய்யப்பட்ட 1040 தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை தலைமை ஆசிரியர் பணியிடமாக நிலை உயர்த்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
  •   544 ஆய்வக உதவியாளர், 344 இளநிலை உதவியாளர் பணியிடங்களும் தோற்றுவித்து உத்தரவிட்டுள்ளார்.
  •   2341  அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 5 ஆண்டுகளில் கணினி வழிக் கல்வி " BOOT " திட்டத்தின் கீழ் செயல்படுத்த முதல்வர் உத்தரவு. 
  •   1880 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும்,         461 உயர்நிலைப்பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த ரூ. 31.21 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவு.
  •   10 மேல்நிலைப்   பள்ளிகளில் அறிவுச்சார் பள்ளிகள் நிறுவவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
  • மேலும், தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் மாவட்டம், வீரசோழனில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் முதற்கட்டமாக 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அறிவுசார் பள்ளிகள் (ஸ்மார்ட் பள்ளி) நிறுவுவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்கென முதல் தவணையாக 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் விடுவிக்க ஆணையிட்டுள்ளார்.   இவையன்றி, திருச்சி மாவட்டத்தில் திருச்செந்துறை, அயிலாப்பேட்டை, சோமரசம்பேட்டை, எட்டரை, இனாம்குளத்தூர் ஆகிய 5 இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அறிவுசார் பள்ளிகள் தொடங்குவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனுமதி வழங்கியுள்ளார்.

தமிழகத்தின் 2341 பள்ளிகளில் கம்ப்யூட்டர் வழி கல்வி: ஜெ. உத்தரவு


தமிழகத்தில் கம்ப்யூட்டர் வழியிலான கல்வித் திட்டத்தை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 5 ஆண்டுகளில் 2341 பள்ளிகளில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
:

March 24, 2012

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலிப் பணியிடவிவரம் கோருதல்.

  •    தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.5559 / டி1 / 2012, நாள். 21.03.2012.
  •   தொடக்கக் கல்வி - உத்தேச காலிப் பணியிடங்கள் விவரம் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / அரசு / தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் 31.05.2012 அன்று பணி ஓய்வினால் ஏற்படும் உத்தேச காலிப் பணியிடங்கள் விவரம் தொடக்கக் கல்வி இயக்குனர் கோரியுள்ளார்.
  •   31.05.2012 அன்று  ஒய்வு பெறுவதால் ஏற்படும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்படும்போது ஏற்படும்  பட்டதாரி / தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உத்தேச காலிப்பணியிட விவரம் 26.03.2012 க்குள் இயக்குனருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து, 65 சதவீதமாக உயருகிறது. மேலும் 2012 ஜனவரி முதல் அகவிலைப்படி கணக்கிட்டு வழங்கப்படும்.

March 22, 2012

முப்பருவ தேர்வு முறை - பள்ளி நாட்கள் பிரிப்பு

அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன், கல்லூரிகளில் செமஸ்டர் முறை போல், பள்ளிகளில் முப்பருவ தேர்வு முறையை செயல்படுத்த உத்தரவிட்டது. இது, வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்.

ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை, சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, முப்பருவமுறை குறித்து, சென்னையில் பயிற்சி அளிக்கப்படும். ஒரு பாடத்திற்கு, மாவட்டத்திற்கு இருவர் தேர்வு செய்யப்படுவர். இவர்கள், மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர்.


பள்ளி நாட்கள், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • ஜூன் 1 முதல் அக்டோபர் 1 வரை- முதல் பருவம்; மொத்த வேலை நாள்- 81.
  • அக்., 3 முதல் டிச., 31 வரை- இரண்டாம் பருவம்; வேலை நாள்- 56.
  • ஜன., 1 முதல் ஏப்., 26 வரை- மூன்றாம் பருவம்; வேலை நாள்- 73.
ஒவ்வொரு பருவம் முடிவிலும், தேர்வு நடக்கும்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு போட்டித்தேர்வு கிடையாது தற்போதைய நடைமுறையையே பின்பற்ற அரசு முடிவு

சென்னை, மார்ச்.22-

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு போட்டித்தேர்வு கிடையாது. தற்போது இருக்கின்ற நடைமுறையையே பின்பற்ற அரசு முடிவு செய்துள்ளது

தமிழக பட்ஜெட்:பள்ளிக் கல்வி துறையின் 4 அறிவிப்புகள் கிடப்பில்

கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது வெளியிட்ட அறிவிப்புகளில், பெரும்பாலானவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களின் தரத்தை மேம்படுத்த நிபுணர்கள் குழு அமைப்பு உள்ளிட்ட, நான்கு அறிவிப்புகள் மட்டுமே பாக்கி உள்ளன.

March 21, 2012

TET -03.06.2012

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006


TAMIL NADU TEACHER ELIGIBLITY TEST (TNTET) - 2012
TEACHER ELIGIBLITY TEST MODEL QUESTION
TEACHER ELIGIBLITY TEST SYLLABUS
          


Dated: 20-03-2012



Chairman

March 16, 2012

Budget 2012-2013 ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ள்

WD
2010-2011ஆ‌ம் ஆ‌ண்டு‌க்கான பொது ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கையை ‌நி‌தி அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி ‌விரை‌வி‌ல் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் தா‌க்‌க‌ல் செ‌ய்ய‌ உ‌ள்ளா‌ர்

நி‌தி‌நிலை அ‌றி‌க்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்:

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இ‌ன்று மு‌த‌ல் விண்ணப்பம்


அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலமாக 2,895 பே‌ர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வை மே 27-‌ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நட‌த்து‌கிறது.
இந்த நிலையில், தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் இன்று முதல் 30-‌ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.
விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.50, தேர்வுக்கட்டணம் ரூ.500 ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை விண்ணப்பம் வாங்கிய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் 30-‌ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (சென்னை அல்லது மதுரை) பதிவு செய்திருக்க வேண்டும். இதுவரை பதிவு செய்யாதவர்கள் 30-‌ம் தேதிக்குள் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

March 14, 2012

RTE Act 2009க்கான NODAL OFFICER நியமனம்.

அரசு கடித எண். 41954 / C2 / 2011 - 3,  16.02.2012.
  • உயர்திரு. பழனிசாமி, இணை இயக்குனர், ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அவர்களை குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009க்கான NODAL OFFICER ஆக நியமனம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.
  • குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 சார்பான ஐயப்பாடுகள் மற்றும் சட்டகருத்துருக்கள் தொடர்பான தெளிவுரைகள் வழங்கும் அதிகாரியாவார்.
  • குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 சார்பான தகவல்களை  வரிசையாக கூட்டங்கள் நடத்தி அனைவருக்கும் சென்றடையும் வண்ணம் இருக்க  வேண்டும் என அரசு உத்திரவிட்டுள்ளது.

நடுநிலைப்பள்ளி வகுப்பு ஆசிரியர்களுக்கு 3 நாள் "DO IT YOURSELF MULTIMEDIA TRAINING" பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது.


  •  தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 002782 / K3 / 2012, நாள். 10.03.2012
  • நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 3 நாள் "DO IT YOURSELF MULTIMEDIA TRAINING" பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது.பயிற்சி நடைபெறும் நாள்கள் : 13.03.2012 முதல் 15.03.2012.
  • பயிற்சி நடைபெறும் இடம் : பெரியார் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை - 600 025 ( பிர்லா கோளரங்கம், அண்ணாபல்கலைக்கழகம் அருகில் )

March 13, 2012

TRB - MATHEMATICS PG/UG STUDY MATERIAL NEW!

ஆசிரியர் தேர்வு வாரியம் : முதுகலை மற்றும் இளங்கலை தேர்வு  கணித  STUDY MATERIAL
  டவுன்லோட் செய்ய   இங்கே கிளிக் செய்க‌

ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல கடவு சீட்டு பெற துறையின் தடையின்மை சான்று கோரும் கருத்துருக்களை மூன்று மாத கால அவகாசத்தில் அனுப்பவேண்டும்-பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறைகள் .

ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல கடவு சீட்டு பெற துறையின் தடையின்மை சான்று கோரும் கருத்துருக்களை மூன்று மாத கால அவகாசத்தில் அனுப்பவேண்டும்-பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறைகள்
    
download link
 

ஓய்வூதிய பலன்கள் பெறுவதற்கான கருத்துருக்களை அனுப்பும்போது "No Due Certificate "இணைத்து அனுப்பவேண்டும்-பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறைகள்

ஆசிரியர் தேர்வு பாடத் திட்டம் 22ம் தேதிக்குள் வெளியீடு

சென்னை : ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்கள், 22ம் தேதிக்குள் வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி புரிவோர் மற்றும் வேலைக்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு வகை தேர்வுகளாக, ஜூன் 3ம் தேதி நடைபெறும் நிலையில், இதற்கான விண்ணப்பங்கள், 22ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. எனினும், தேர்வுக்கான பாடத்திட்டங்கள், இன்னும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறும்போது, ""பாட வாரியாக, பாடத் திட்டங்களை தயாரித்து, அரசுக்கு அனுப்பி, ஒப்புதலையும் பெற்று விட்டோம். ஆனால், அவை இன்னும் அரசின், "கெஜட்டில்' வெளியாகவில்லை. விண்ணப்பங்களை வழங்குவதற்குள் இணையதளத்தில் பாடத் திட்டங்கள் வெளியிடப்படும்,'' என்றனர்.

March 10, 2012

துறைத் தேர்வுகள்-மே 2012-விண்ணப்பிக்க, வரும் 31ம் தேதி கடைசி நாள்.



வரும் மே மாதம் நடைபெறும் துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. அரசுப் பணியில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைவருமே, இந்த துறைத் தேர்வுகளை எழுதலாம். பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல்,பட்டதாரிகள் வரை இத்தேர்வை எழுதலாம்.
டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம்,இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க, வரும் 31ம் தேதி கடைசி நாள். தேர்வுகள், மே 24ம் தேதி முதல், 31ம் தேதி வரை, 32 மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் டில்லி ஆகிய 33 மையங்
களில் தேர்வுகள் நடைபெறும் என, டி.என்.பி. எஸ்.சி., தெரிவித்துள்ளது.

வருமான வரி உச்ச வரம்பை ரூ. 3 லட்சமாக உயர்த்தலாம்: பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை


முன்னாள் நிதி அமைச்சரும் பா.ஜனதா மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு, நேரடி வரி குறித்து ஆலோசனை நடத்தி அறிக்கை தயார் செய்தது. இந்த அறிக்கையை சபாநாயகர் மீரா குமாரிடம் தாக்கல் செய்தது. தாக்கல் செய்துள்ள அறிக்கையில்:-

பள்ளி சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் தொடர்பான பயிற்சி

மாநிலத்திட்ட இயக்குனர் அவர்களின் கடிதம்  ந.க.எண் - 87/அ5/பயிற்சி/அ.க.இ/2011 நாள்:05.3.12.

பள்ளி சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் தொடர்பான பயிற்சி தொடக்க மற்றும் உயர் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு  4  கட்டங்களாக வட்டார வளமையத்தில் வழங்கப்பட   இருக்கிறது.

1st  batch  -  19 .3 .2012  to  20 .03 .2012

2nd  batch  -  21 .3 .2012  to  22 .03 .2012

3rd  batch  -   26 .3 .2012  to  27 .03 .2012

4th  batch  -  28 .3 .2012  to  29 .03 .2012 

தேசிய தகுதித் தேர்வை யுஜிசி மாற்றியமைக்க வேண்டும்

கோவை, மார்ச் 9 : பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்ற தகுதித் தேர்வாகக் கருதப்படும் என்.இ.டி. எனப்படும் தேசிய தகுதித் தேர்வை மாற்றியமைக்க வேண்டிய நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு உள்ளது.பல்கலைக்கழக முதன்மை மாணவர்களாக இருந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆசிரியராக பணியாற்றியவர்களால் கூட இத்தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. ஒவ்வொரு முறையில் இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக உள்ளது. அதே சமயம், தற்போது ஆசிரியர் பணிக்கு படித்து முடித்து வெளியே வருபவர்கள் இத்தேர்வை எளிதாக எழுதி தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர்.எனவே இதனை திறனியும் தேர்வாக சிற்நத முறையில் மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: பி.லிட். படித்தவர்கள் எந்தத் தாளை எழுதலாம்? தேர்வு வாரியம் விளக்கம்

சென்னை, மார்ச் 9: ஆசிரியர் தகுதித் தேர்வில் பி.லிட். தமிழ்ப் பட்டதாரிகள் எந்தத் தாளை எழுதுவது என்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் 3-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை முதல் தாளும், பிற்பகல் இரண்டாம் தாளும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புபவர்கள் முதல் தாள் தேர்வையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புபவர்கள் இரண்டாம் தாள் தேர்வையும் எழுதலாம். பி.லிட். மற்றும் பி.எட். படித்தவர்கள் இரண்டாம் தாளை எழுதலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.லிட். படிப்போடு டிப்ளமோ படித்தவர்கள், புலவர் பயிற்சி முடித்தவர்கள் எந்தத் தாளை எழுத வேண்டும் என்பது தொடர்பாக பலர் விளக்கம் கேட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியதாவது: பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு ஆசிரியர் டிப்ளமோ பட்டத்தையும், அதன் பிறகு பி.லிட். பட்டமும் பெற்றவர்கள் முதல் தாளையும், இரண்டாம் தாளையும் எழுதலாம். பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு பி.லிட். பட்டமும், புலவர் பயிற்சியும் முடித்தவர்கள் இரண்டாம் தாளை எழுதலாம். இணையதளத்தில் வெளியீடு: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக எழும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் எளிய வினா, விடை அமைப்பிலான தகவல்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இவை வெளியிடப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

March 7, 2012

ஆசிரியர் தகுதி தேர்வு: 07.03.2012 அறிவிப்பு விளம்பரம்

சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்: தகுதியிருந்தும் புறக்கணிப்பு

தேனி: பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

எஸ்.எஸ்.ஏ., மூலம் தேர்வு செய்யப்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கான பணி உத்தரவு வெளியாகி உள்ளது. வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு நிராகரிக்கப்பட்டு, தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தந்தனர்.


டி.திருப்பதி,தேவதானப்பட்டி
: கட்டட கட்டுமான ஆசிரியர் பணிக்கான நேர்க்காணலில் பங்கேற்றேன்.1985ல் பதிவு செய்து சீனியாரிட்டி அடிப்படையில் முதல் இடத்தில் உள்ளேன்.

ஆர்.ரமேஷ்,போடி
: கட்டட கட்டுமான பணி ஆசிரியர் பணிக்கு 1987ல் பதிவு செய்துள்ளேன். தகுதி இருந்தும் பணி உத்தரவு வரவில்லை.

கன்னிகா,சின்னமனூர்
: ஓவிய ஆசிரியருக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆசிரியர் பயிற்சி முடித்து ஓவியத்தில் உயர் தகுதி பெற்றுள்ளேன். 2000-ல் பதிவு செய்துள்ளேன். எனக்கு பின் பதிவு செய்தவர்களுக்கு பணி உத்தரவு கிடைத்துள்ளது.

சி.சின்னச்சாமி,கோவில்பட்டி
: ஓவிய ஆசிரியர் பணிக்கு சீனியாரிட்டி இருந்தும், பணி நியமன உத்தரவு கிடைக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஸ்ரீதேவி:(முதன்மை கல்வி அலுவலர்)
: மாவட்டத்தில் 1,700 பேரிடம் நேர்க்காணல் நடந்தது. தகுதி,திறமை அடிப்படையில் 274 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது,' என்றார்

ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22-ந்தேதி முதல் மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது

சென்னை, மார்ச்.7-

ஜுன் மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் வருகிற 22-ந் தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு

மத்திய அரசின் உத்தரவின்படி அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

அதன்படி தமிழ்நாட்டில் 23-8-2010-ந் தேதி அன்றோ அதற்கு பின்னரோ ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதிதேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வை 5 ஆண்டுகளுக்குள் எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.

சுயநிதி பள்ளிகளில் பி.எட். படிக்காமல் பணிபுரியும் ஆசிரியர்கள் 5 வருடங்களுக்குள் பி.எட்.படிக்கவேண்டும். பின்னர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.

1-வது முதல் 8-வது வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டும். பிளஸ்-2 படித்துவிட்டு 2 வருட ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியராக பணிபுரிபவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் தாள் பரீட்சையை எழுதவேண்டும். பி.எட். படித்தவர்கள் 2-வது தாள் பரீட்சையை எழுதவேண்டும். சில தனியார் பள்ளிகளில் 1-முதல் 8 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் சில வகுப்புகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் தாளையும் எழுதவேண்டும்., 2-வது தாளையும் எழுதவேண்டும்.

விண்ணப்பம்

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பம் மார்ச் 22-ந்தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கிடைக்கும்.

விண்ணப்பத்தின் விலை ரூ.50.

விண்ணப்பம் கொடுக்கும் போது அதில் ஒரு வங்கிச்செல்லான் இருக்கும். அதை யாரும் தொலைக்காமல் பத்திரமாக வைத்து அந்த செல்லானை பூர்த்தி செய்து `ஸ்டேட் பாங்க்'கில் ரூ.500 செலுத்தவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கவேண்டும். அவ்வாறு ஒப்படைக்க ஏப்ரல் 4-ந்தேதி கடைசி நாள்.

பாடத்திட்டம்

தேர்வு ஜுன் மாதம் 3-ந் தேதி நடைபெறுகிறது. தேர்வில் ஆப்ஜெக்ட் முறையில் கேள்விகள் இருக்கும். அதாவது ஒரு கேள்விக்கு 4 பதில் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்று மட்டும் சரியானதாக இருக்கும். 3 பதில்கள் தவறாக இருக்கும்.

ஆசிரியர் தேர்வு எழுத பாடத்திட்டம் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

தேர்வு தேதி இப்போதைக்கு தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. சில நாட்கள் முந்தவும் சில நாட்கள் பிந்தவும் வாய்ப்பு உள்ளது. தேர்வை 7 லட்சம் பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 8 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

March 2, 2012

Primary & Upper Primary CRC March Dates

தொடக்கக் கல்வி - மார்ச் 8 - அனைத்து பள்ளிகளிலும் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும்.

Buttonதொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 5156 / J3 / 2012, நாள். 03.02.2012.
Buttonஇன்று மகளிரின் நிலை எல்லாம் துறைகளிலும் உயர்ந்துள்ளது. இத்தனை சிறப்புமிக்க மகளிரை பெருமைப்படுத்தும் விதமாக மகளிர் தினம் உலக அளவில் மார்ச் 8ல் கொண்டாடப்பட உள்ளது.
Buttonஅனைத்து பள்ளிகளிலும் மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் சாதனைப் படத்த பெண்களைப் பற்றியும், பெண்கள் முன்னேற்றம் பெண்கள் கல்வி சார்ந்து அரசு மேற்கொண்டு வரும் அரிய திட்டங்கள் பற்றியும்  மாணவர்களிடையே காலை வழிப்பாட்டுக் கூட்டத்தில் எடுத்து கூற வேண்டும்.
Buttonபேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தி தொடர் நிகழ்வாக, உலக மகளிர் தினத்தில் சிறப்பாக பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை அளித்து பாராட்டுகளை தெரிவித்து மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

ஆப் லைனில் பள்ளி விவரம்:மார்ச் 13க்குள் வழங்க உத்தரவு

விருதுநகர்: தமிழகப் பள்ளிகளின் விவரங்கள் குறித்து, ஆப் லைனில் விவரங்கள் சேகரித்து, மார்ச் 13 க்குள் வழங்க அனைவருக்கும் இடை நிலைக் கல்வி இயக்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் , பள்ளிகளின் விவரங்கள் சேகரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆன் லைன் மூலமாக சேகரிக்கப்பட்ட விவரங்கள், இந்த ஆண்டு ஆப் லைன் (புதிய சாப்ட்வேர்) மூலம் சேகரிக்கப்படுகிறது.

இதில், பள்ளிகள் அமைவிடம், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி,மெட்ரிக்., பள்ளி ஆகிய விவரங்கள், 9 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் எண்ணிக்கை, இன வாரியாக எண்ணிக்கை, பதவி வாரியாக ஆசிரியர்கள் எண்ணிக்கை, கல்வித் தகுதிகள், கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம், பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விவரங்களை சாப்ட்வேரில் ஏற்றி, மார்ச் 13 க்குள் வழங்க, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்க மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Minority Subjects Tentative List of Candidates Provsionally Selected for Appointment

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் கேள்விகள் எப்படி இருக்கும்? பாடத்திட்டத்துடன் மாதிரி வினாக்கள் ஓரிரு நாளில் இணையதளத்தில் வெளியீடு

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு இந்த ஆண்டு முதல்முறையாக ஆசிரியர் தகுதித்தேர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஓரிரு நாளில் வெளியிடப்படுகிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வு

தமிழ்நாட்டில் இதுவரை அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் என அனைத்து வகையான ஆசிரியர்களும் மாநில அளவிலான பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நியமிக்கப்பட்டு வந்தனர்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தையல், ஓவியம், இசை, உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்களை முன்பு இருந்து வந்ததைப் போன்று பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்ய அரசு திட்டமிட்டு இருந்தது.

1.4.2010 முதல் அமல்

இதற்கிடையே, இந்தியாவில் இலவச கட்டாய கல்வி சட்டம் கடந்த 1.4.2010 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பாக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் முதல்கட்டமாக பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் மட்டும் தகுதித்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தகுத்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

ஓரிரு நாளில் இணையதளத்தில் வெளியீடு

தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) வரையறை செய்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி தயாரிக்கப்பட்டு உள்ளது. மொழி ஆசிரியர் (தமிழ், ஆங்கிலம்), கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர், வரலாறு, புவியியல் உள்ளிட்ட சமூகவியல் ஆசிரியர் என்று 3 வகையாக தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது முதல்முறையாகா தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளதால் அனைத்து மாணவர்களும் தெரிந்துகொள்ளும் வண்ணம் மாதிரி வினாத்தாள்களுடன் கூடிய பாடத்திட்டம் இன்னும் ஓரிரு நாளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (ஞுஞுஞு.ஞ்சுஸ.ஞ்ஙூ.ஙூகூஷ.கூஙூ) வெளியிடப்படுகிறது. இதன்மூலம், எந்த முறையில் கேள்விகள் கேட்கப்படும் என்பதையும், என்னென்ன பாடங்களை படிக்க வேண்டும் என்பதையும் தேர்வு எழுத காத்திருக்கும் பி.எட். பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம்.

5 ஆண்டு செல்லத்தக்கது

ஆசிரியர் தகுதித்தேர்வில் மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவுக்கு ஒரு மதிப்பெண் வீதம் மொத்த மார்க் 150. இந்த தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அதாவது 150-க்கு 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம். மதிப்பெண் தகுதியையும் கூட்டிக்கொள்ளலாம்.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்று 5 ஆண்டுகள் செல்லத்தக்கது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.