முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்படும் வழங்கப்படுகிறது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலமாக 2,895 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வை மே 27-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.
இந்த நிலையில், தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் இன்று முதல் 30-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.
விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.50, தேர்வுக்கட்டணம் ரூ.500 ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை விண்ணப்பம் வாங்கிய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கண்டிப்பாக மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (சென்னை அல்லது மதுரை) பதிவு செய்திருக்க வேண்டும். இதுவரை பதிவு செய்யாதவர்கள் 30-ம் தேதிக்குள் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment