About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

December 9, 2011

PDF கோப்புகளுக்கு Password உருவாக்க



PDF கோப்புகளே பெரும்பாலும் பாதுகாப்பு கருதியும் சில எழுத்துரு பிரச்சினை காரணமாகவே உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புகளை உடைப்பதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. இதனை தடுக்க என்னவழி? நாம் உருவாக்கும் கடவுச்சொல் வலிமையற்றதாக இருந்தால் மட்டுமே கடவுச்சொற்களை (password) எளிதில் உடைக்க முடியும். பிடிஎப் கோப்புகளை உருவாக்க இலவச மென்பொருள்கள் பல உள்ளன. கடவுச் சொல்லுடன் கூடிய PDF கோப்புகளை உருவாக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு சில மென்பொருள்கள் மட்டுமே உள்ளன. அதில் ஒன்றுதான் Doro PDF மென்பொருள் ஆகும்.


கீழே குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இணையத்தின் உதவியுடன் மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் நீங்கள் கடவுச் சொல்லுடன் PDF கோப்பாக உருவாக்க நினைக்கும் கோப்பினை திறக்கவும்.
பின் File –Print என்னும் தேர்வினை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் தோன்றும் windowவில் Printer என்னும் optionல் Doro PDF Writer என்பதை தேர்வு செய்து பின் OK என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் windowவில் Encryption என்னும் Tab தேர்வு செய்து குறிப்பிட்ட கடவுச் சொல்லை உள்ளிடவும். கடவுச் சொல்லானது எண் மற்றும் எழுத்துக்கள் கலந்து இருப்பின் சிறந்தது. கூடவே பெரிய எழுத்துக்கள் இருப்பது சிறந்தது.
கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் Create என்னும் button அழுத்தவும். தற்போது PDF கோப்பானது கடவுச் சொல்லுடன் உருவாக்கப்பட்டிருக்கும்.  இந்த Doro PDF மூலம் அனைத்து விதமான கோப்புகளையும் கடவுச் சொல்லுடன் கூடிய PDF கோப்பாக உருவாக்க முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். தரவிரக்கம் செய்ய  http://thesz.diecru.eu/content/doro.php

No comments: