பிளஸ் டு பாடபுத்தகங்கள் மே 10 ம் தேதி முதல் பள்ளிகளுக்கு வழங்க
தமிழ்நாடு பாட நூல் கழகம் ஏறப்பாடு செய்துள்ளது.தனியார் பள்ளிகள்
ஒருங்கிணைந்து, பாடப் புத்தகங்களைப் பெற்று, பின்னர் குறிப்பிட்ட மையத்தில்
வைத்து பிரித்து எடுத்துக் கொள்ளும் முறை, பத்தாம் வகுப்பு பாடப்
புத்தகங்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்டது. இந்த முறைக்கு நல்ல வரவேற்பு
கிடைத்திருப்பதால், இதே முறையில், பிளஸ் 2 பாடப் புத்தகங்களும்
வினியோகிக்கப்படும். நாளை, 10ம் தேதி முதல், பிளஸ் 2 பாடப் புத்தகங்களை
பள்ளிகளுக்கு வினியோகிக்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு
உத்தரவிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே, தேவையான புத்தகங்கள், மாவட்டங்களுக்கு
சென்றுவிட்டதால், அவற்றை, தங்கள் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு
வினியோகிக்கும் பணியை, முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்வர். பிளஸ் 1
தேர்வு முடிவு வெளியானபின், புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்களுடன் இணைந்து,
பாடப் புத்தகங்களை பெற ஏற்பாடு செய்து கொள்ளலாம். சென்னையில், அதிகளவில்
மெட்ரிக் பள்ளிகள் உள்ளதால், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தனியார் பள்ளிகள்
ஒருங்கிணைந்து, பாடப் புத்தகங்களை பெற்று, பின்பு பிரித்து எடுத்துக்கொள்ள
வேண்டும். 12, 13 ஆகிய சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும், பாடநூல் கிடங்குகள்
இயங்கும்.
No comments:
Post a Comment