About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

April 5, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படுவார்கள் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

"ஒரே ஒரு தேர்வு தான்; தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில் அறிவித்தார்.


புதிய அரசாணை விவரம்:கொள்கை மாற்றம் குறித்து, கடந்த 28ம் தேதியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:

*கடந்த ஆண்டு நவ., 15ம் தேதியிட்ட அரசாணை குறித்து, தெளிவுரை வழங்கும் வகையில், இந்த அரசாணை வெளியிடப்படுகிறது.
*இதன்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறை கொள்கையை, தமிழக அரசு மாற்றியுள்ளது. இவர்களுக்கான போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற பெயரில் நடக்கும்.
*பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், இன சுழற்சி முறை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் இருக்கும்.
*இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், மாநில அளவிலான வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே, தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எஸ்.பி. முத்துக்குமரன் (புதுக்கோட்டை), வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். ஆசியர்களை தேர்வு செய்ய தகுதித் தேர்வு, போட்டித் தேர்வு நடத்தப்படுவதில் உள்ள குழப்பங்களைக் களைய வேண்டும் என்றார்.

அவருக்கு பதிலளித்து அமைச்சர் என்.ஆர்.சிவபதி பேசியது:
தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே தகுதித் தேர்வு, போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.) மூலம் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வு மூலம் முதுநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மதிப்பெண் மூலம் நியமிக்கப்
படுவார்கள்.
இடைநிலை, பட்டதாரி, முதுநிலை என அனைத்து ஆசிரியர் தேர்விலும் இன சுழற்சி முறை பின்பற்றப்படும்.
இந்த ஆண்டு 2,895 முதுநிலை ஆசிரியர்கள், 18,343 பட்டதாரி ஆசிரியர்கள், 5,451 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார் அமைச்சர் சிவபதி.
வணிகவரித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம்: பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களில் 52 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்களால் இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு எப்படி கற்பிக்க முடியும்?
ஆசிரியர் படிப்பு படித்தவர்களுக்கு பணி வழங்குவதைவிட மாணவர்களின் எதிர்காலம் மிகவும் முக்கியமானது. அதனால்தான் தகுதித் தேர்வு அல்லது போட்டித் தேர்வுகள் மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர், என்றார்.
மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி (திண்டுக்கல்): 52 வயதில் பணியில் சேர்பவர்களுக்கு பயிற்சி அளித்து பயன்படுத்திக் கொள்வதே சரியானது. பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் பழைய முறையையே பின்பற்ற வேண்டும் என்றார்.

No comments: