முன்னாள் நிதி அமைச்சரும் பா.ஜனதா மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு, நேரடி வரி குறித்து ஆலோசனை நடத்தி அறிக்கை தயார் செய்தது. இந்த அறிக்கையை சபாநாயகர் மீரா குமாரிடம் தாக்கல் செய்தது. தாக்கல் செய்துள்ள அறிக்கையில்:-
வருமான வரியின் உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த பரிந்துரைக்கலாம். ரூ.3 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு முறைப்படி வரி விதிக்கப்படும். அதேபோல் ரூ.1 கோடியாக இருந்த சொத்து வரி ரூ. 5 கோடியாக உயர்த்தலாம். அதற்கு மேல் உள்ள சொத்து கணக்குகளுக்கு வரி வதிக்கப்படும்.
மேலும் 30 சதவீதமாக இருக்கும் நிறுவன வரியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் மத்திய பட்ஜெட்டில் பிரதிபலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
* வருமான வரி உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது. இதன்படி வருடத்துக்கு ரூ. 3 லட்சம் வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ரூ.3 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 10 சதவீதம் வரியும், ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 20 சதவீதம் வரியும் ரூ.20 லட்சத்துக்கும் மேல் வருமானம் பெறுபவர்களுக்கு 30 சதவீதம் வரியும் விதிக்கலாம்.
* சொத்து வரியை பொறுத்தவரை ரூ.5 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு வைத்துள்ளவர்கள் வரி செலுத்தப்பட வேண்டும். ரூ.5 கோடி முதல் ரூ. 20 கோடி வரை சொத்து மதிப்பு உள்ளவர்களுக்கு 0.5 சதவீதம் வரியும் ரூ. 20 கோடி முதல் ரூ. 50 கோடி வரை சொத்து மதிப்பு உள்ளவர்களுக்கு 0.7 சதவீதம் வரியும் ரூ.50 கோடிக்கும் மேலாக சொத்து மதிப்பு உள்ளவர்களுக்கு 1 சதவீத வரியும் விதிக்கலாம்.
No comments:
Post a Comment