பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுக்களை கொண்டு வந்து புழக்கத்தில் விட்ட 3 பேரை மத்திய புலனாய்வு அமைப்பினர் சென்னையில் கைது செய்தனர்.
ஒரு நாட்டின் ரூபாய் நோட்டுகளை போலியாக அச்சடித்து, சம்பந்தப்பட்ட நாடுகளில் புழக்கத்தில் விடுவதை தொழிலாக செய்து வரும் சர்வதேச கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் இந்த மூவரும். அந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து அந்த நாட்டின் ஸ்திரதன்மையை ஆட்டம் காணச் செய்ய வேண்டும் என்பதுதான் இந்த கும்பலின் நோக்கம்.
எதிரி நாடுகளை மறைமுகமாக பழிவாங்க இந்த கும்பலை சில நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன. சென்னையில் கைது செய்யப்பட்ட கள்ளநோட்டு கும்பலின் பின்னணியில் இருந்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. செயல்பட்டிருப்பது விசாரணை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட 3 பேரும் கள்ள நோட்டு மாற்றும் கும்பலின் ஏஜெண்டுகளாக செயல்பட்டவர்கள். இவர்களிடம் இருந்து சிறிய அளவிலான கள்ள நோட்டுகளே கைப்பற்றப்பட்டுள்ளன.