About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

January 9, 2012

தம்மாத்தூண்டு சைஸில் மீன்தொட்டி : 2 ஸ்பூன் தண்ணீர் போதும்


மாஸ்கோ : உலகிலேயே சிறிய மீன்தொட்டியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் ரஷ்ய கலைஞர் அனடோலி கொனேகோ. 2 ஸ்பூன் தண்ணீர் விட்டால் இந்த தொட்டி நிரம்பிவிடும். ரஷ்யாவின் ஓம்ஸ்க் பகுதியில் வசிப்பவர் அனடோலி கொனேகோ(57). சைபீரியாவின் முதல் ‘மைக்ரோ மினியேச்சர் கலைஞர்’ என்று புகழப்படுபவர். உள்ளங்கையில் வைக்கும் அளவே உள்ள குட்டியூண்டு மீன் தொட்டியை உருவாக்கியிருப்பதுதான் இவரது சமீபத்திய சாதனை.
இதுபற்றி அனடோலி கூறியதாவது: மினியேச்சர் பொருட்கள், சிற்பங்கள் உருவாக்கும் முயற்சியில் கடந்த 30 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளேன். சில படைப்புகள் ரூ.35 லட்சம் வரை விலைபோயிருக்கின்றன. புதுமையாக ஏதாவது செய்துகொண்டே இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரம்பத்தில் பொழுதுபோக்காகதான் இதை துவக்கினேன். எதிர்பாராதவிதமாக அவை சாதனையாக அமைந்தன. தற்போது உருவாக்கியுள்ள மீன் தொட்டி உலகிலேயே மிகமிக சிறியதாகும். இது 30 மி.மீ. நீளம், 24 மி.மீ. அகலம் 14 மி.மீ. ஆழம் கொண்டது. இதில் 2 டீஸ்பூன் அதாவது 10 மி.லி. நீர் மட்டுமே ஊற்ற முடியும். மிகச்சிறிய வரிக்குதிரை மீனை மட்டுமே இதில் விடமுடியும். நுண்ணிய மீன்தொட்டிக்கு ஏற்ற வகையில் மினியேச்சர் தாவரங்கள், கூழாங்கற்களையும் உள்ளே அமைத்துள்ளேன். சிரிஞ் உதவியுடன்தான் தண்ணீரை ஊற்ற, அகற்ற முடியும். இவ்வாறு அனடோலி கூறினார். அரிசி, கசகசா விதைகள், மனித முடிகளில் ஓவியங்கள் வரைந்தது, பிரபல நாவலாசிரியர் ஆன்டன் செக்கோவ் எழுதிய ‘கமிலயான்’ நூலை 0.9 க்கு 0.9 மி.மீ. அளவில் 29 பக்கம் கொண்ட மினியேச்சர் புத்தகமாக உருவாக்கி 1996-ம் ஆண்டு கின்னஸ் சாதனை படைத்தது, ஊசியின் கண்துளையில் 12 ஒட்டகங்கள் சிற்பத்தை உருவாக்கியது ஆகியவை இவரது இதர சாதனைகள்.

No comments: