Battery பற்றி அனைவரும் அறிந்து இருப்போம். Battery பொதுவாக ஜின்க், மக்னீசியம், மெர்குரி போன்ற வேதிப் பொருட்களால் தான் இது உருவாகப்படுகின்றது. இது போன்ற batteryகளால் சுற்றுசூழல் மிகவும் பாதிப்பு அடைகின்றது. இதைத் தடுக்கும் விதமாக சமீபத்தில் paper batteryகள் கண்டுபிடித்து இருக்கின்றார்கள். இதுவரை உலோகத்தை பயன்படுத்தாமல் batteryயை உருவாக்க முடியாது என்கிற நிலைமை இருந்தது. ஆனால் தற்போது முழுக்க முழுக்க paper batteryயை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
இதனை Swedenன் உப்சலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி திரு.மரியா ஸ்ட்ரோம் தான் கண்டுபிடித்து இருக்கின்றார். இந்த battery சுற்றுச்சூழலுக்கு 100 சதவிகிதம் பாதுகாப்பானவை. இது வெறும் சுற்றுச் சூழலுக்கு தானா என்று கவலைப்படவேண்டாம். இந்த batteryயை மிகச் சுலபமாக உருவாக்கி விடலாம். ஏன் என்று சொன்னால் இது ஒரு கடல் வாழ் உயிரினமான க்ளாடோபோரா என்கிற ஒரு கடல் வாழ் அல்கேவினால் தான் இது உருவக்கப்பட்டு இருந்தது. மேலும் இது கடலில் உருவாவதால் விலையும் மிக மலிவானதாக இருக்கும்.
இது polymer battery என்கிற வகையைச் சார்ந்ததாக இருக்கின்றது. ஆனால் இதுவரை இருக்கின்ற batteryகளை விட இது 200 மடங்கு அதிக மின்சாரத்தை தேக்கி வைத்துக் கொள்ளக் கூடிய சக்தி இதற்கு இருக்கின்றது என தெரிவிக்கின்றனர். மிகச் சுலபமாகவே சார்ஜ் செய்து விடலாம். இப்பொழுது பயன்பாட்டில் இருக்கின்ற lithium batteryகளை விட வேகமாக சார்ஜ் ஆகக் கூடிய தன்மை படைத்ததாக இருக்கின்றது. தற்பொழுது தொடக்க நிலையில் இருக்கும் இதனுடைய பயன்பாடுகள் கூடிய விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று இதனை உருவாக்கியவர் கூறுகின்றார்.
No comments:
Post a Comment