இடைநிலை
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை
நேரடியாக நிரப்புவதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித் துறை
செயலாளர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
திண்டுக்கல்
மாவட்டம் சானர்ப்பட்டி அருகே உள்ள மலைப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பள்ளியில்
இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் திரு. எம். கோபால் என்பவர் மதுரை
உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட மனுவில் கூறி இருப்பதாவது : -
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கீழ் ஏராளமான நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன.
இது போன்ற தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை பி.எட்., முடித்துள்ள இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்ப கடந்த 2007ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பி.எட்., முடித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் பலருக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சில ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகு காலிப்பணியிடங்கள் இல்லை என்று கூறி மீண்டும் இடைநிலை ஆசிரியர்களாக நியமித்துள்ளனர்.
இது போன்ற தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை பி.எட்., முடித்துள்ள இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்ப கடந்த 2007ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பி.எட்., முடித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் பலருக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சில ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகு காலிப்பணியிடங்கள் இல்லை என்று கூறி மீண்டும் இடைநிலை ஆசிரியர்களாக நியமித்துள்ளனர்.
இது
தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. 2011 - 2012 கல்வியாண்டில்
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தரம் உயர்த்தப்பட்ட
நடுநிலைப்பள்ளிகளில் 1485 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக
உள்ளது. அரசானை ப்படி அப்பணியிடங்கள் பி.எட்., முடித்துள்ள இடைநிலை
ஆசிரியர்கள் கொண்டு நிரப்ப வேண்டும். ஆனால் அப்பணியிடங்கள் நேரடியாக நிரப்ப
உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை 23.01.2012 அன்று அறிவிப்பு வெளியிட்டது.
அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதுபோன்று நேரடியாக நிரப்பும் பட்சத்தில் எங்களுக்கு பதவி உயர்வு
கிடைக்காமல் போய்விடும். பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் நடவடிக்கை 2007
ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிராக உள்ளது.
எனவே அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நேரடியாக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ரத்து செய்ய வேண்டும்.
நேரடியாக
ஆசிரியர்கள் தேர்வு செய்ய தடை விதிக்க வேண்டும். பி.எட்., முடித்துள்ள
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் அந்த பணியிடங்கள்
நிரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதே
போன்று மதுரை, விருது நகர், தேனி, கரூர், புதுகோட்டை ஆகிய மாவட்டங்களை
சேர்ந்த மேலும் 17 இடைநிலை ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த
மனுக்கள் அனைத்தும் நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு
வந்தது. மனுதாரர்கள் சார்பில் எம்.அஜ்மல்கான், கே.அப்பாதுரை ஆகியோர்
ஆஜாராகி வாதாடினர்.
மனுக்களை
விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் 18 பேருக்கும் தலா ஒரு பட்டதாரி ஆசிரியர்
பணியிடம் காலியாக வைத்திருக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு
சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குனர்,
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோருக்கு பதிலளிக்க நோட்டிஸ்
அனுப்ப உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment