About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

April 20, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை.

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.
சமூக அறிவியல்
1. சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
2. சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம்
3. முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை
4. இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்
5. மூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை
6. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்
7. சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
8. நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்
9. வஞ்சி யாருடைய தலைநகரம்  - சேர அரசர்கள்
10. பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்
11. தொண்டி யாருடைய துறைமுகம்  - சேர அரசர்கள்
12. முசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
13. சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கேவை, கேரளம்
14. உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்
15. ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோபூர்
16. சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்
17. பணடைய சோபூர்களின் சின்னம் எது? புலி
18. சோபூர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்
19.சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்
20. இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்
21.சாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - மஞ்சள்
22. சாலையில் செல் எதன்பதற்கான எச்சரிக்கை விளக்கு - பச்சை
23. சாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - சிவப்பு
24. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
25. கடற்கரை கோயிலும், குகைக் கோயிலும் காணப்படும் இடம் - மாமல்லபுரம்
26. கொனார்க் அமைந்துள்ள மாநிலம் - ஒரிசா
27. கொனார்க்கில் அமைந்துள்ள கோயில் - சூரியனார் கோயில்
28. இந்தியாவின் வடக்கிழக்கில் உள்ளது - அசாம்
29. காசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம் - அசாம்
30. மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர் - வாங்காரி மார்தோய்.
31. இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரைக் கிராமம் - தனுஷ்கோடி
32. எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம் - ஷில்லாங்
33. காஷ்மீரின் தலைநகர் - ஸ்ரீநகர்
34. தால் ஏரி அமைந்துள்ள இடம் - ஸ்ரீநகர்
35. மேகாலயா மாநிலத்தின் தலைநகரம்  - ஷில்லாங்
36. புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் - சர் ஐசக் நியூட்டன்
37. பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட பகுதியின் இன்றைய பெயர் - தருமபுரி
38. இயேசுவை சிலுவையில் அறைந்த தினம் - புனித வெள்ளிக்கிழமை
39. கிருத்துவ மதத்தினரால் கொண்டாடப்படும் விழா - கிறிஸ்துமஸ்
40. சீக்கிய சமயத்தினரால் கொண்டாடப்படுது - மகாவீர் ஜெயந்தி
41. புத்த சமயத்தினரால் கொண்டாடப்படுவது - புத்த பௌர்ணமி
42. பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை - வில்லுப்பாட்டு
43. கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் - செங்கல்
44. வானவில்லில் காணப்படும் நிறங்களின் எணணிக்கை - ஏழு
45. கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - திருநெல்வேலி
46. சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - வேலூர்
47. பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
48. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் - பந்தமடை
49. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் - கன்னியாகுமரி
50. 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் - மூங்கில்.
மேலும் சமூக அறிவியல் பாடத்திற்கான வினா விடைகள் இப்பகுதியில் தொடர்ந்து வழங்கப்படும்.

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினா விடைகளைப் பார்க்க..

No comments: