About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

May 30, 2012

பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு : ஆன்லைனில் நாளை துவக்கம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளிவந்தது. கடந்தாண்டை போலவே நடப்பாண்டும் மதிப்பெண் பட்டியில் வழங்கும் போது சம்பந்தப்பட்ட பள்ளியிலேயே மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக ஆன்லைன் பெயர் பதிவு செய்யும் முறை குறித்து பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கோவையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
நாளை பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் வினியோகம் செய்யப்படுகிறது. இதையடுத்து பள்ளிகளிலே ஆன்லைன் மூலம் மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு பெயர் பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்து கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஜோதிமணி கூறுகையில்,“ நாளை பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் வினியோகம் செய்யப்படுகிறது. மதிப்பெண் பட்டியல் வினியோகம் செய்யும் பொழுதே மாணவர்கள் ஆன்லைன் மூலம் அந்தந்த பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு பெயர் பதிவு செய்து கொள்ளலாம்.

இதனால், 30ம் தேதி முதல் ஜூன் 13 வரை 15 பதிவு செய்து கொள்ளலாம். ஒரே சீனியாரிட்டி வழங்கப்படுகிறது. பதிவிற்கு பின் உடனடியாக பதிவு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,” என்றார். ரேஷன் கார்டு கட்டாயம் மாணவ, மாணவிகள் மதிப்பெண் பட்டியல் பள்ளியில் பெறும் போது வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் பெயர் பதிவு செய்து கொள்ள பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், ரேஷன் கார்டு அவசியம் தேவை. ஏற்கனவே பத்தாம் வகுப்புக்கு பின் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவு செய்திருந்தால் அந்த பதிவு அட்டையை அவசியம் எடுத்து வரவேண்டும்.

No comments: