About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

December 6, 2011

பேஸ் புக் ,ஜிமெயில், டுவிட்டர் - ஒரே உலாவியில் ஒன்றுக்கும் மேற்பட்ட லாகின்





நாம் பயன் படுத்தும் உலாவிகளில் ஒரே கணக்கை மட்டும் தான் திறந்து பார்க்க முடியும் . ஒரே உலாவிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜிமெயில் பயன்படுத்த
நான் பலக்கட்டுரை களை படித்துள்ளேன் . ஆனால் நாம் இன்று பார்ப்பது முகவும் எளிமையும் அருமையும் மான ஒரு டிப்ஸ் இதை பயன் படுத்தி எத்தனை கணக்கை வேண்டுமானாலும் நீங்கள் திறந்து கொள்ளலாம் . 
இது நெருப்பு நரி உலாவியிலும் கூகுள் க்ரோமிலும் எப்படி என்று பார்ப்போம் .

நெருப்புநரி உலாவியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கை திறப்பது . 

1.முதலில் நெருப்புநரி உலாவிக்கு சுருக்கு வழி (ஷர்ட் கட் )ஒன்றை உருவாக்கி கொள்ளுங்கள் . 

2.ரைட் கிளிக் செய்து PROPERTIE-ஐ தேர்ந்தெடுத்து TARGET என்ற ஒன்று இருக்கும் . அது எந்த ட்ரைவில் மொசில்லா இருக்கிறது என்று காட்டும் . அதன் இறுதியில்
கீழே வரும் குறியீட்டை சேர்க்கவும் .

-profilemanager –no-remote

"C:\Program Files\Mozilla Firefox\firefox.exe"இப்படி இருப்பதை 

"C:\Program Files\Mozilla Firefox\firefox.exe" -profilemanager –no-remote இப்படி மாற்றவும் .

மாற்றி  விட்டு நெருப்பு நரி உலாவியை RESATRT செய்யவும் .

செய்தவுடனே  ஒரு POP -UP விண்டோ ஒன்று தெரியும் . 

அதில்  CREATE NEW PROFILE என்று கொடுத்து மொசில்லா வினுள் வந்து 

எத்தனை கணக்கை வேண்டுமானாலும் திறந்து பார்க்கலாம் . 

கூகுள்  குரோம் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கை திறப்பது

மொசில்லா போன்று பெரிதாய் எதுவும் செய்ய தேவை இல்லை .

Incognito mode. என்பதற்கு கொண்டு வந்தாலே போதும் .

 இதற்கு Ctrl + Shift + N செய்தால் வந்து விடும் . எத்தனை கணக்கை 

வேண்டுமானாலும் திறந்து கொள்ளலாம் .

இனி  ஜிமெயில் கணக்கில் சென்று எல்லாம் மாற்றம் செய்ய வேண்டிய 

தேவை இல்லை . .

குறிப்பு : இது ஜிமெயில் ,ட்விட்டர் , பேஸ் புக் ,யாஹூ , ஆர்குட் அனைத்திருக்கும் பொருந்தும் .  

No comments: