About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

December 8, 2011

ஏ.இ.இ.ஓ., பணிக்கு கவுன்சிலிங்


சென்னை : நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் இருந்து, உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் பெறுவதற்கான, கலந்தாய்வு சென்னையில்  நடக்கிறது.
தொடக்கக் கல்வி இயக்குனர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தொடக்கக் கல்வி சார்நிலைப் பணியில், நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியில் இருந்து, உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் பெறும் கலந்தாய்வுக் கூட்டம், சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 9ம் தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு நடக்கவுள்ளது.

இதில், இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி நிலவரப்படி, தொடக்கக் கல்வி இயக்குனரால் வெளியிடப்பட்ட முன்னுரிமைப் பட்டியலில், "150 ஏ' வரை இடம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

No comments: