About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

December 3, 2011

பயர்பாக்சை முந்தியது கூகுள் குரோம் [Stats Counter]



இணையத்தில் உலவிகளுக்கான போட்டியில் பயர்பாக்ஸ் உலவியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது குரோம். குரோமின் எளிமையான தோற்றத்தாலும் இணைய உபயோகம் வேகமாக இருப்பதாலும் பெரும்பாலானவர்கள் குரோம் உலவியை தொடர்ந்து உபயோகித்து கொண்டு இருக்கின்றனர். குரோமின் வளர்ச்சியை கண்டு பல புதிய பதிப்புகளை பயர்பாக்ஸ் வெளிவிட்டாலும்(கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்) கூகுள் குரோம் தொடர்ந்து கணிசமாக வளர்ந்து கொண்டு உள்ளது. Internet Explorer உலவி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.



உலகளவில் 25.69% பேர் குரோமையும், பயர்பாக்சை 25.23% பயனர்களும், IE உலவியை 40.63% பயனர்களும் உபயோகிக்கின்றனர். இதில் IE பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் சுமார் 18% குறைந்துள்ளது.


இந்தியாவில் உலவி பயன்பாட்டின் படி கூகுள் குரோம் முதல் இடத்திலும், பயர்பாக்ஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்தியாவில் Internet Explorer உலவியின் வளர்ச்சி அகல பாதாளத்திற்கு சென்று விட்டது.  


இதே வளர்ச்சியில் இருந்தால் அடுத்த ஆண்டில் முதல் இடத்திற்கு கூட வந்து விடும் என நினைக்கிறேன். என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments: