About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

February 29, 2012

2895 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ButtonAdvertisement No.03 / 2012 Dated.28.02.2012

2895 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

Buttonஅறிவிப்பு வெளியீடு நாள் : 28.02.2012

Buttonவிண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2012 

Buttonபோட்டித்தேர்வு நாள் :27.05.2012  

Buttonஊதிய விகிதம் : ரூ.9300 - 34800 + தர ஊதியம் :4800/-

Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu

February 27, 2012

சீனாவில் உலகின் மிகப் பெரிய விமான நிலையம்

பீஜிங்: அமெரிக்காவின் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தை தோற்கடிக்கும் வகையில், உலகின் மிகப் பெரிய விமான நிலையத்தை நிர்மாணிக்க, சீனா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் உள்ள ஹார்ட்ஸ்பீல்டு - ஜாக்சன் சர்வதேச விமான நிலையம்தான், விமானப் போக்குவரத்தில் உலகின் மிகப் பெரிய விமான நிலையம் என கருதப்படுகிறது. இந்நிலையில், அதையும் தோற்கடிக்கும் வகையில் பீஜிங்கின் தென் கிழக்கில், உலகின் மிகப் பெரிய சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து நிலையம் ஒன்றை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. மொத்தம் 15 பில்லியன் டாலர் செலவில் அமையக் கூடிய இந்த நிலையம், பீஜிங்கிற்கும், ஹேபெய் மாகாணத்தின் லாங்பாங் நகருக்கும் இடையில் உள்ள பகுதியில் நிறுவப்படலாம் எனத் தெரிகிறது

ஆஸ்கர் விருதுகள் : சிறந்த வெளிநாட்டுப்படமாக ஈரான் படம் தேர்வு

லாஸ் ஏஞ்சல்ஸ் : 84 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், சிறந்த வெளிநாட்டுப் படமாக, ஈரான் நாட்டின் “ தி செபரேசன்” படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தி ஹூகோ திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு, கலை, சவுண்ட் மிக்சிங், விசுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. 2010ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், ஹாலிவுட் இயக்குனர் டேவிட் பாய்ல், மும்பை சேரிப்பகுதி பையனை வைத்து எடுத்த ஸ்லம்டாக் மில்லியனர்ஸ் படம், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது

February 26, 2012

மிகக் குறைந்த விலை டேப்லெட் கணினிகள் BSNL வெளியிட்டது பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்ய

பிரபல டெலிகாம் நிறுவனமான BSNL மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை வெளியிட்டுள்ளது. BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் இணைந்து வெறும் Rs.3250 விலையில் இந்த மலிவு விலை கணினிகளை வெளியிட்டுள்ளது. உலகிலேயே மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை ஆகாஷ் நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டது. சில பிரச்சினைகளால் இந்த கணினிகள் வருவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. ஆகவே ஆகாஷ் கணினிகளுக்கு முன்பதிவு செய்து காத்திருக்காமல் அதே விலை உள்ள புதிய T-PAD IS701R கணினிகளை முன்பதிவு செய்து பெற்று கொள்ளுங்கள். மார்ச் 5 இருந்து இந்த கணினிகள் விற்பனைக்கு வருகின்றன.

ஏப்ரலில் ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு - ரூ.5 ஆயிரம் உழைப்பூதியம்

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரலில் துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே வருவாய்த்துறை மூலம் சமூகப்பொருளாதார ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


தற்போது நகராட்சி, மாநகராட்சி அளவில் தனியாகவும், ஊராட்சி ஒன்றியங்களில் பி.டி.ஓ.,க்கள் தலைமையிலும், பேரூராட்சிகளில் நிர்வாக அலுவலர்கள் தலைமையிலும் கணக்கெடுப்பு நடக்க உள்ளது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட அடிப்படையில் கணக்கெடுப்பு பகுதிகள் பிரிக்கப்பட்டு, ஏப்ரல் முதல் பணிகள் துவங்குகின்றன.


ஒவ்வொரு கணக்கெடுப்பாளரும், 150 வீடுகள் வரை கணக்கெடுக்க உள்ளனர். 40 நாட்கள் நடக்கும் இப்பணிக்காக ஒரு ஊழியருக்கு ரூ.5 ஆயிரம் ரூபாய் உழைப்பூதியம் வழங்கப்படுகிறது.

February 24, 2012

பி.ஏ. ஆங்கிலம் (சி.ஏ) மாணவர்கள் ஆட்சியரிடம் மனு


நாமக்கல், பிப். 20: ஆங்கிலம் கணினி செயலாக்கம் படிப்பை ஆங்கில பட்டப்படிப்புக்கு இணையாக கருத வேண்டும் என வலியுறுத்தி தனியார் கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.நாமக்கல் மாவட்டம், வெப்படை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ கந்தன் கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் (சி.ஏ.) பயிலும் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆட்சியர் ஜெ.குமரகுருபரனைச் சந்தித்து மனு அளித்தனர்.

குரூப்-4 மூலம் 5,000 பேர் விரைவில் தேர்வு:

சென்னை:குரூப்-4 நிலையில், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற, 5,000 பேரை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு செய்ய உள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் கூறியதாவது:நடப்பாண்டில், குரூப்-1 மற்றும் குரூப்-2 (பட்டதாரி தகுதி) தேர்வுக்குரிய காலியிட பட்டியல்கள் வந்துள்ளன.இதுதவிர, குரூப்-4 நிலையில், அரசின் பல்வேறு துறைகளுக்கு, 5,000 பேரை தேர்வு செய்யவும் உத்தரவு வந்துள்ளது. தட்டச்சர்கள், இளநிலை உதவியாளர் உட்பட பல்வேறு பணிகளுக்கு, இவர்கள் தேர்வு செய்யப் படுவர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், போட்டித் தேர்வில் பங்கேற்கலாம்.

இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப் படும்.ஏற்கனவே, வெளியான வி.ஏ.ஓ., மற்றும் குரூப்-2 தேர்வு முடிவில் இடம் பெற்றவர்களுக்கு, விரைவில் பணி நியமனம் வழங்கப் படும். இந்தத் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட மாட்டாது. டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகள், முடிவுகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உடனுக்குடன் வெளியிடுவதுடன், தேர்வு முடிவிற்குப் பின், அதற்கான விடைகளையும் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட உள் ளது.இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன

February 23, 2012

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெறுவதற்கான ஆலோசனைகள்:

    சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று, நாட்டின் உயர்ந்த பதவியை அடைய ஆசை மட்டுமே போதாது. அதற்கான முயற்சியும், நுணுக்கமும் கட்டாயம் தேவை. முதல்நிலை தேர்வுக்கான பாடத்திட்டம் மாறியுள்ள நிலையில், மாறுதல் குறித்து தெளிவாக அறிந்து, அதற்கு தயாராகும் முறைகள் குறித்தும் நன்கு தெரிந்துகொள்வது அவசியம்.

February 22, 2012

சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் உருவம் பொறித்த புதிய 5 ரூபாய் நாணயம்: ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது


சுதந்திரப் போராட்ட வீரர் ஷாகித் பகத்சிங் உருவம் பொறித்த புதிய 5 ரூபாய் நாணயத்தை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடுகிறது. அந்த நாணயத்தின் ஒரு புறத்தில் 'பஞ்சாப் சிங்கம்' பகத்சிங் உருவம், மற்றும் ஷாகித் பகத்சிங் நூற்றாண்டு விழா என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.
 
அவரது உருவத்தின் கீழ் 1907-2007 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாணயத்தின் மறுபுறம் சிங்கமுகம் கொண்ட அசோகா தூண் மற்றும் ரூ.5 என்று பொறிக்கப்பட்டுள்ளது.
 
இந்தநாணயம் 23 மி.மீட்டர் சுற்றளவு கொண்டது. இது இரும்பு மற்றும் குரோமியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தை ரிசர்வ் வங்கி இன்னும் சில நாட்களுக்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

February 21, 2012

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டங்களுக்கு அரசு ஒப்புதல்

இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் 1.4.2010-ம் ஆண்டுக்கு பின்னர் சேர்ந்தவர்களும், வேலை தேடி காத்திருப்போருக்கும் ஆசிரியர் ஆவதற்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் மே மாத இறுதியில் நடத்த முடிவு செய்துள்ளது.


அதற்கான பாடத்திட்டங்களை தயாரித்து ஒப்புதலுக்கு அரசுக்கு அனுப்பி இருந்தது. இந்த பாடத்திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் பாடத்திட்ட விவரம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. தேர்வுக்கான விண்ணப்பபடிவங்கள் அச்சிடும்பணி நடைபெற்று வருகிறது

விரைவில் அறிவிப்பு வெளியாகிறது ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு அனுமதி அளித்தது தமிழக அரசு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, தகுதித் தேர்வு நடத்தும் நாள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின்போது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், புதியதாக ஆட்சிக்கு வந்துள்ள அதிமுக அரசு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை காரணம் காட்டி, ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப் போவதாக அறிவித்தது.

February 9, 2012

ஆசிரியரின் புதிய முயற்சி‍: புதுக்குறள்

g[Jf;Fws;

            mwk;
1/   kjk;Twp rr;rut[ ,d;wp kdjhy;
    ,jk;Twp xd;bwd;g ed;W
2/   vg;bghGJk; brhy;yp tUtha; vdpy;jP’;nf
    jg;bgd;W ePczh;jy; vd;W
3/   gpwe;njhk; ,Ue;njhk; taJ Koe;J
    ,we;njhk; mJty;y thH;t[
4/   capuQqtha; Muk;g nghuhLk; jd;ik
    caph;gphpa[k; md;Wtiu cz;L
5/   Fiwtpd;wp thGk; kf;fs; cjthj
    epiwtpd;wp thGtJ Vd;
bghUs;   
1/   nfl;gJ}ck; ek;chpik vy;nyhh;f;Fk; tpl;Lf;
    bfhLg;gJ}ck; ed;nw ekf;F
2/   vdf;F cdf;F vdvjw;F rz;il
    fzf;F tpjnkh ntW
3/   vk;kjKk; rk;kjk; vd;Wzh;thh; rhd;nwhh;eP
    ,k;kjk; ey;byd;g jpy;
4/   ntjpay; khw;wk; jtwpd; vJt[k;jhd;
    ghjpapy; epd;W tpLk;
5/  thf;fspj;j  kf;fSf;F bgha;f;fhky; ,g;bghGJ
   thf;fspj;j vy;yhk; bfhL     
                   
,d;gk;
1/  fhh;nkf  Te;jy;  mHnf jdpjhd;Mk;
   ahh;bjhLj;j ge;jy; mJ
2/  rpyk;g[ fijczh; ,y;iy filapy;
   g[yk;gpna bry;tha; mHp
3/  nghijg; nghl;lhy;jhd; ehd;kaf;fk; bfhs;ntdh
   ngijg; bgaiuf;nfs; ed;W
4/  goj;jts; ey;y FzbkhL jtw;iw
   ,oj;jts; kPl;Lths; ed;W
5/  bghpath;f;F bra;a[k; khpahij jd;dhy;
   cwpath;f;F <a[k;ey; gz;g[ 
 
tzf;fk;/ Fws; ,yf;fzKiwg;go tpjpfs; kPwhky; vGjpa[s;nsd;/vGj;J mir rPh; jiy mo ahg;g[ mzp bjhil eak; Xir vd midj;jpYk; ftdk; brYj;jpa[s;nsd;/ 2042 Mz;LfSf;Fg;gpwF mtuJ vGj;jpyf;fzg;go vGjpa[s;nsd;/
jkpGf;F vd;dhy; Koe;j rpWbjhz;L/jh’;fs; jhd; vdf;F
xU tha;g;g[ mspf;Fk;go gzpt[ld; nfl;Lf;bfhs;fpnwd;/
mwk; bghUs; ,d;gk; vd;w K:d;W jiyg;g[fspy; 136 mjpfhuk; vd 1360 Fws; vGjpa[s;nsd;/
tha;g;g[ mspg;gPh;fs; vd;w ek;gpf;ifa[ld;
              j’;fs; cz;ika[s;s
              K:/tPugj;jpud;
              ,ilepiy Mrphpah;
              C/X/e/ep/gs;sp
              bfhHp”;rpg;gl;o
              ehHpf;fy;gl;o/m”;ry;
              nryk; khtl;lk;
              j/bg/vz;/636201        

 வாழ்த்துக்கள்  வீரா 


February 3, 2012

உயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு

விண்வெளியில் சூரிய குடும்பத்துக்கு வெளியே பல கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை உயிரினங்கள் வாழ தகுதியற்றவைகளாக உள்ளன.
அதே நேரத்தில் உயிரினங்கள் வாழக்கூடிய 3 கிரகங்களை கண்டுபிடித்தனர். தற்போது அந்த வரிசையில் 4-வதாக புதிய கிரகம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு ஜி ஜே 667 சி என்று பெயரிட்டுள்ளனர்.  
 
இந்த கிரகம் பூமியில் இருந்து 33 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. அங்கு நிலவும் தட்பவெப்பநிலை தண்ணீர் இருப்பதை உறுதிபடுத்துகிறது. இங்கு சூரியனைவிட மிக குறைந்த அளவே வெப்பம் நிலவுகிறது. எனவே, அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.இந்த கிரகம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.