விண்வெளியில் சூரிய குடும்பத்துக்கு வெளியே பல கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை உயிரினங்கள் வாழ தகுதியற்றவைகளாக உள்ளன.
அதே நேரத்தில் உயிரினங்கள் வாழக்கூடிய 3 கிரகங்களை கண்டுபிடித்தனர். தற்போது அந்த வரிசையில் 4-வதாக புதிய கிரகம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு ஜி ஜே 667 சி என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த கிரகம் பூமியில் இருந்து 33 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. அங்கு நிலவும் தட்பவெப்பநிலை தண்ணீர் இருப்பதை உறுதிபடுத்துகிறது. இங்கு சூரியனைவிட மிக குறைந்த அளவே வெப்பம் நிலவுகிறது. எனவே, அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.இந்த கிரகம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment