About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

April 19, 2012

பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் கிடையாது - அமைச்சர் சிவபதி

"வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட மாட்டாது,'' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் நடந்த விவாதத்தில், மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேசும் போது,""பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வால், அவர்கள் பாதிக்கப்படுவர். வேண்டுமானால், பதிவு மூப்பில் இருப்பவர்களுக்கு ஒரு பயிற்சி கொடுத்து, அவர்களை பணியில் சேர்த்துக் கொள்ளலாம்,'' என்றார்.


மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் ஆகியோரும், இதே கருத்தை வலியுறுத்தினர்.

இதற்கு, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி கூறும் போது,""ஆசிரியர் நியமனம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பை, தமிழக அரசு கடைபிடிக்கும். ஆசிரியர் நியமனம், தேர்வு முறையில் தான் இருக்கும். பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட மாட்டார்கள்,'' என்றார்.

No comments: