தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளைக் களைந்து, கல்வித் தரத்தை
மேம்படுத்துவதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தலைமையில், ஒன்பது பேரை
உறுப்பினர்களாக நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
குழுவின் பணிகள்:
* ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டங்களில் உள்ள குறைகளைக் கண்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை, அரசுக்குப் பரிந்துரை செய்தல்.
குழுவின் பணிகள்:
* ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டங்களில் உள்ள குறைகளைக் கண்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை, அரசுக்குப் பரிந்துரை செய்தல்.
* தரமான கல்வியை அளிப்பதற்காக, பள்ளிகளுக்கு தேவைப்படும் இன்றியமையாத கட்டமைப்பு வசதி, தளவாட வசதி, உபகரணங்கள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்குப் பரிந்துரை அளித்தல் வேண்டும்.
* மேம்படுத்தப்பட்ட கல்வி முறைக்கு ஏற்ப, தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களை செய்ய, பரிந்துரை செய்ய வேண்டும்.
* அனைத்துப் பள்ளி செயல்பாடுகளையும் மேம்படுத்த, பள்ளி ஆய்வு முறைகளில்
தேவைப்படும் மாற்றங்களை பரிந்துரை செய்யும். மேலும், தேவையான இதர பரிந்துரைகளையும் வல்லுனர் குழு அரசுக்கு அளிக்கும்.
* குழுவின் செயல்பாடுகளுக்கு தேவையான அனைத்து செலவுகளையும், மாநில கல்வியியல் ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.
வல்லுனர் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் விவரம்:
பெயர் பதவி
1. என்.ஆர்.சிவபதி, பள்ளிக்கல்வி அமைச்சர் குழுத் தலைவர்
2. டி.சபீதா, பள்ளிக்கல்வி செயலர் உறுப்பினர்
3. பாலகுருசாமி, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் உறுப்பினர்
4. முனைவர் பாலசுப்பிரமணியன், துறைத் தலைவர் (ஓய்வு), கல்வியியல் துறை, சென்னை பல்கலை உறுப்பினர்
5. முனைவர் எஸ்.சுவாமிநாதப்பிள்ளை, முன்னாள் இயக்குனர், பாரதியார் பல்கலை உறுப்பினர்
6. முனைவர் ஜி.பாலசுப்பிரமணியன், சி.பி.எஸ்.இ., முன்னாள் இயக்குனர் உறுப்பினர்
7. முனைவர் சி.சுப்பிரமணியம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் உறுப்பினர்
8. மணி, பள்ளிக்கல்வி இயக்குனர் உறுப்பினர்
9. சங்கர், தொடக்கக் கல்வி இயக்குனர் உறுப்பினர்
10. தேவராஜன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் உறுப்பினர்-செயலர்
No comments:
Post a Comment