கடந்த
ஆட்சியில் அறிக்கை வெளியிடப்பட்டு, ஆசிரியர் பணியில் சேர்ந்த
அனைவருக்கும், டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விளக்கம்: தேசிய
ஆசிரியர் கல்வி நிறுவனம் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளபடி, 2010, ஆகஸ்ட்
23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகி,
அதன்பின் பணி நியமனம் செய்யப்பட்ட, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்
பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும், டி.இ.டி.,
தேர்வு எழுதத் தேவையில்லை.
இந்த தேதிக்குப் பின், ஆசிரியர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகி,
பணி நியமனம் பெற்ற ஆசிரியர், கண்டிப்பாக டி.இ.டி., தேர்வை எழுத வேண்டும்.
இவ்வாறு, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், முந்தைய ஆட்சியில் அறிவிப்பு வெளியாகி, இந்த ஆட்சியில் பணி
நியமனம் பெற்ற அரசு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் அனைவரும், டி.இ.டி.,
தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். இந்த விதிவிலக்கு, தனியார்
பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.
தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்பினால், அரசு பள்ளிகளில் பணிபுரியும்,
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேசமயம், தேர்வுக் கட்டணமாக இவர்கள் செலுத்திய, 500 ரூபாய் திருப்பி
தரப்படுமா என்பது தெரியவில்லை.
No comments:
Post a Comment