About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

December 17, 2011

9,399 புதிய ஆசிரியர்கள் நியமனம் பட்டியல் தயாரிக்கும் பணியில் பள்ளிக் கல்வி இயக்ககம் தீவிரம்


பள்ளிக் கல்வியின் கட்டுப்பாட்டில் வரும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக 9,399 இடங்களில் புதிய ஆசிரியர் களை தெரிவு செய்து தர வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், பள்ளிக் கல்வி இயக்ககம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, மேற்கண்ட பணியிடங்களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 5,500 உயர்நிலைப் பள்ளிகள், 5,400 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், கடந்த ஆண்டு நிலவரப்படி 4,098 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், கடந்த ஆண்டில் 1,210, புதிய பணி இடங்கள் 1,305 என முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. இது தவிர சிறப்பு ஆசிரியர்கள் 1526 பணியிடங்கள், விவசாய ஆசிரியர் பணியிடங்கள் 25 காலியாக உள்ளன.
மேற்கண்ட பணியிடங்களில் ஆசிரியர்களை இந்த ஆண்டே நியமிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, காலிப் பணியிடங்கள் குறித்த பட்டியலை பள்ளிக் கல்வி இயக்ககம் தயாரித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் வழங்கியுள்ளது. இதையடுத்து, மேற்கண்ட பணியிடங்களில் ஆசிரியர்களை நியமனம் வசதியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.பள்ளிக் கல்வியின் கட்டுப்பாட்டில் வரும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக 9,399 இடங்களில் புதிய ஆசிரியர் களை தெரிவு செய்து தர வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், பள்ளிக் கல்வி இயக்ககம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, மேற்கண்ட பணியிடங்களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 5,500 உயர்நிலைப் பள்ளிகள், 5,400 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், கடந்த ஆண்டு நிலவரப்படி 4,098 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், கடந்த ஆண்டில் 1,210, புதிய பணி இடங்கள் 1,305 என முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. இது தவிர சிறப்பு ஆசிரியர்கள் 1526 பணியிடங்கள், விவசாய ஆசிரியர் பணியிடங்கள் 25 காலியாக உள்ளன.
மேற்கண்ட பணியிடங்களில் ஆசிரியர்களை இந்த ஆண்டே நியமிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, காலிப் பணியிடங்கள் குறித்த பட்டியலை பள்ளிக் கல்வி இயக்ககம் தயாரித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் வழங்கியுள்ளது. இதையடுத்து, மேற்கண்ட பணியிடங்களில் ஆசிரியர்களை நியமனம் வசதியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

No comments: