About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

December 5, 2011

ஆன்லைனில் PDF பைல்களை சுலபமாக மொழி மாற்றம் செய்ய


ஒரு சில நேரங்களில் நமக்கு தேவையான விவரங்களை PDF வடிவில் தரவிறக்க இணையத்தில் தேடுவோம். அந்த சமயத்தில் அந்த தகவல் நமக்கு வேண்டிய மொழிகளில் இல்லாமல் ஏதேனும் மற்ற மொழிகளில் இருக்கும் ஆக நமக்கு தேவையான மொழியில் தேடி நேரம் தான் விரயம் ஆகும். இனி அந்த கவலையே வேண்டாம் வேறு மொழிகளை இருந்தாலும் சுலபமாக ஆன்லைனில் அதை நமக்கு வேண்டிய மொழிகளில் மாற்றி கொள்ளலாம். சுமார் 59 மொழிகளில் இந்த வசதியை பெற்று கொள்ளலாம். (இந்திய மொழிகளில் ஹிந்தியில் மட்டுமே மாற்றம் செய்ய முடியும்)
  • இதற்கு முதலில் இந்த Google Translate லிங்கில் செல்லுங்கள். கீழே இருப்பதை போல விண்டோ வரும் 
  • அதில் நான் காட்டி இருக்கும் Translate a document என்பதை க்ளிக் செய்யவும். அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் Choose file என்பதை தேர்வு செய்து மொழிமாற்றம் செய்ய வேண்டிய PDF பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • அங்கு TO என்ற இடத்தில் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டிய மொழிகளை தேர்வு செய்துகொள்ளவும். அந்த பட்டியலில் உள்ள 59 மொழிகளில் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். 
  • முடிவில் அங்கு உள்ள Translate என்ற பட்டனை அழுத்தினால் போதும் அந்த தவல்களை நீங்கள் விரும்பிய மொழிகளில் பார்த்து கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் மாற்றம் செய்வதற்கு முன் 

 ஹிந்தில் மொழி மாற்றிய பிறகு 

டிஸ்கி: ஹிந்தி படிக்க தெரிந்தவர்கள் யாரவது ஹிந்தியில் மொழிமாற்றம் சரியாக ஆகி உள்ளதா என படித்து கூறினால் நல்லது. தவறாக இருக்கும் பட்சத்தில் பதிவை நீக்கி தவறான தகவலை  மற்றவர்களுக்கு கொண்டு செல்லாமல் தடுத்து விடலாம்.

குரோம் நீட்சி- IE Tab
கூகுள் நிறைய சேவைகளை இணையத்தில் வழங்கி  கொண்டு உள்ளது. ஆனால் இவைகளை ஒரே நேரத்தில் நாம் உபயோக்க வேண்டுமென்றால் ஒரே மெயிலில் பதிந்து இருக்க வேண்டும் ஒவ்வொரு வசதிக்கும் ஒவ்வொரு மெயில்கள் கொடுத்து இருந்தால் ஒரே உலவியில் திறக்க முடியாது. அது போன்ற சமயங்களில் நாம் வேறு ஒரு பிரவுசரை திறந்து அதன் மூலம் இந்த வசதியை பெறுவோம். இனி அப்படி செய்ய வேண்டியதே இல்லை நம் கூகுள் குரோமில் ஒரே விண்டோவிலேயே இந்த வசதியை சுலபமாக பெறலாம் இந்த நீட்சியை நம் உலவியில் நிறுவினால். 

No comments: