சென்னை,
மே 16: பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 30-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார்.
தொடர்
மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த
முகாமில் பங்கேற்க வந்த அமைச்சர் சிவபதி நிருபர்களிடம் கூறியது: பிளஸ்
2 தேர்வு முடிவுகள் மே 22-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் மே 30-ல் வழங்கப்படும்.
மொத்தம்
8.2 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை எழுதியுள்ளனர். இவர்கள்
அனைவருக்கும் புகைப்படம், பார் கோட் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு
அம்சங்களுடன் மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்பட்டு வருகிறது. எனவே,
மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும்.
மதிப்பெண்
சான்றிதழ் வழங்கப்படும்போதே, அந்தந்தப் பள்ளிகளில் ஆன்-லைன் மூலமாக
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவும் மேற்கொள்ளப்படும். 15 நாள்களுக்கு மாணவர்கள்
பள்ளிகளின் மூலமாக ஆன்-லைனில் பதிவு செய்யலாம். அவர்கள் அனைவருக்கும் ஒரே
பதிவு மூப்பின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும். இதற்காக பிரத்யேக
சாப்ட்வேரும், சர்வர்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
No comments:
Post a Comment