பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில்
மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்கும்
என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலந்தாய்வின் முதல் நாளான ஜூலை 2-ம்
தேதி, எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாற்றுத்
திறனாளிகள், விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குவோர் உள்ளிட்ட சிறப்புப்
பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்படும்.
விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 3 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.
இந்த மூன்று விளையாட்டு இடங்களுக்கான
மாணவர்களை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுக் குழு தேர்வு செய்து அளிக்கும்
நடைமுறை உள்ளது. எனவே எம்.பி.பி.எஸ். படிப்பில் சிறப்புப் பிரிவினருக்கான
கலந்தாய்வு தொடங்கும் அதே ஜூலை 2-ம் தேதி, அண்ணா பல்கலைக்கழக
பி.இ.-பி.டெக். சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும்
தொடங்குகிறது.
ஜூலை 3 முதல்...: தொழில் கல்வி மாணவர்களுக்கான பொறியியல் படிப்பு கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி முதல் நடைபெறும்.
பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல்
படிப்பு கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதிக்குப் பிறகு தொடங்கும் என்று உயர்
கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கலந்தாய்வு தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment