About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

May 16, 2012

தொடக்கக்கல்வி -ஆங்கில வழி வகுப்புகள்- அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இணைப்பிரிவுகள் தொடங்க பள்ளி பெயர் பட்டியல் கோரப்பட்டுள்ளது.


தமிழகத்தில் இயங்கி வரும் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு 10 பள்ளிகள் வீதம்   320 பள்ளிகளில் 2012 - 2013 ஆம்  கல்வியாண்டில்  ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் சுமார் 160 பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் இயங்கும் பிரிவுகளுக்கு இணையாக 
ஆங்கிலவழி இணைப்பிரிவுகள் தொடங்கி நடத்திட அரசால் அனுமதி 
வழங்கப்பட்டுள்ளது.
எனவே முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 பள்ளிகளில் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு மட்டும் இரண்டு ஆங்கில வழி இணைப்பிரிவுகள் 2012 -13 ஆம் ஆண்டில் தொடங்க அனுமதி வழங்கிட ஏதுவாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் தங்களது மாவட்ட அளவில், ஊரகப் பகுதியில் இயங்கும் 10 அரசு  மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளை தெரிவு செய்து, அப்பள்ளிகளில் 1  ஆம் வகுப்பு ஆங்கில வழி இணைப்பிரிவுகள் தொடங்க ஏதுவாக அனைத்து விதத்திலும் ஆய்வு செய்து அப்பள்ளிகளின் விவரப்பட்டியல் இயக்குனருக்கு அனுப்பி வைக்க தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

No comments: