About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

December 2, 2011

பிளாக்கர் பதிவில் Blogger Poll வசதியை இணைப்பது எப்படி?


பிளாக்கரில் பல எண்ணற்ற வசதிகள் உள்ளது. அந்த வசதிகளில் ஒன்று தான் Blogger Poll வசதி. இந்த வசதியின் மூலம் நம் பிளாக்கிற்கு வரும் வாசகர்களிடம் கருத்து கேட்க சிறிய ஓட்டெடுப்பு நடத்த எதுவாக உள்ளது. ஆனால் இந்த வசதியை நாம் பிலாக்கரின் சைட்பாரில் மட்டுமே பயன்படுத்த முடியும். பிளாக்கர் பதிவில் இந்த வசதியை நேரடியாக இணைக்க முடியாது. நம் பதிவில் வாசகர்களிடம் கருத்து கேட்க வேண்டுமானால் poll வசதிக்காக மற்ற தளங்களின் உதவியை நாட வேண்டி உள்ளது. அந்த தளங்களில் உறுப்பினர் ஆகி பிறகு இந்த பிளாக்கர் பதிவில் விட்ஜெட்டை சேர்க்க வேண்டும். ஆனால் இப்பொழுது சிறிய ட்ரிக்ஸ் பயன்படுத்தினாலே போதும் நேரடியாக Blogger Poll வசதியை நம்முடைய பதிவுகளில் இணைத்து விடலாம்.

  • முதலில் நீங்கள் எப்பொழுதும் போல Poll விட்ஜெட்டை உங்கள் பிளாக்கர் சைட் பாரில் இணைத்து கொள்ளுங்கள். (தெரியாதவர்கள் Design ==> Add a Gadget ==> Poll சென்று விட்ஜெட் உருவாக்கி கொள்ளுங்கள். )
  • poll விட்ஜெட் உருவாக்கிய வுடன் உங்கள் வலைப்பூவை ஓபன் செய்துகொண்டு Source Code(Ctrl + u) பகுதிக்கு செல்லுங்கள். 
  • அடுத்து Ctrl + F கொடுத்து கீழே உள்ள URL தேடவும்.
http://www.google.com/reviews/polls
  • இந்த URL கொடுத்து தேடினால் உங்களுக்கு கீழே இருப்பது போன்ற ஒரு கோடிங் கிடைக்கும்.  
  •  இது போன்று கோடிங் கண்டுபிடித்தவுடன் இந்த கோடிங்கை முழுவதுமாக காப்பி செய்து கொண்டு பிளாக்கரின் New Post பகுதிக்கு செல்லுங்கள்.
  • Edit HTML பகுதியை கிளிக் செய்து அந்த காப்பி கோடிங்கை பேஸ்ட் செய்து விடவும்.
  •  போதும் நீங்கள் Compose பகுதிக்கு சென்றால் இந்த விட்ஜெட் சேர்ந்திருப்பதை பார்க்கலாம். இனி எப்பொழுதும் போல உங்கள் பதிவை டைப் செய்து விட்டு பப்ளிஷ் செய்து விடலாம். 
இப்பொழுது பதிவில் Poll விட்ஜெட் சேர்ந்திருப்பதை காணலாம். 

No comments: