!-end>!-local>
April 30, 2012
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு வழிமுறை கையேடுகள் தமிழ்,ஆங்கிலம்,கணிதம் ,அறிவியல் ,சமூக அறிவியல்
மருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்
1 | Aaduthenapalai | ____ | aristolochia bracteolata |
2 | Aagayathamarai | ____ | Pistia stratiotes |
3 | Aalamaram | ____ | ficus-benghalensis |
4 | aamanakku | ____ | Ricinus communis |
5 | aanai nerunji | ____ | pedalium murex |
6 | aathondai | ____ | capparis zeylanica |
7 | aavarai | ____ | Cassia auriculata |
2012 - 2013 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் 01.06.2012 பள்ளி திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடக்கக்கல்வி இயக்கக கட்டுபாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய துவக்க / நடுநிலைப்பள்ளிகளிலும் கோடை விடுமுறை முடிந்து 2012-2013 ஆம் கல்வியாண்டில் 01.06.2012 வெள்ளிக்கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
TNPSC - Posts included in Group-IV Services & Executive Officer, Gr.III included in Group-VIII Services.
INSTRUCTION TO THE CANDIDATES...
List of Notifications | ||||||
S No. | Advt. No./ Date of Notification | Name of the Post | Online Registration | Date of Examination | Activity | |
From | To | |||||
1 | 14/2012 | Posts included in Group-IV Services | 27.04.2012 | 28.05.2012 | 07.07.2012 | Apply Online |
Executive Officer, Gr.III included in Group-VIII Services |
இடமாறுதல் விண்ணப்பங்களை பெற தடை - ஆசிரியர்கள் அதிர்ச்சி.
திருநெல்வேலி:
இடமாறுதல் விண்ணப்பங்களை பெற திடீர் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொடக்க
கல்வி ஆசிரிய, ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில்
தொடக்க கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரிய,
ஆசிரியைகளுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த
ஆண்டுக்கான கவுன்சிலிங்கிற்கு அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம்
விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது.
இலவச சமச்சீர் பாடப்புத்தகங்கள் விநியோகம் துவக்கம்-
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.எல்.ஸி.,
வகுப்புக்கான இலவச சமச்சீர் பாடப்புத்தங்களை வினியோகம் செய்யும் பணி
துவங்கியது.
April 28, 2012
RULES – Tamil Nadu School Educational Subordinate Service - Art Masters – Amendment to Special Rules – Orders – issued.
G.O.Ms.No.81 School Education (M1) Department Dated:26.03.2012.
“(iv) A Diploma in Fine Arts awarded by the Director of Technical Education or a
Degree in Fine Arts awarded by the Madras University or the Bharathidasan University.”
கல்வி இணை செயல்பாடுகளில் பகுதி நேர ஆசிரியர்கள்
ராமநாதபுரம்: "கல்வி இணை செயல்பாடுகளில், பகுதி நேர ஆசிரியர்கள்
ஈடுபடுத்தப்படுவர்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இணை இயக்குனர்
பழனிச்சாமி தெரிவித்தார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு
முப்பருவ கல்வி முறை, இந்தாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான,
"தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு' முறை குறித்த பயிற்சி, ஒவ்வொரு
ஒன்றியத்திலும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் பகுதி 4
* சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்
* அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்
* சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
* கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
* அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்
* சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
* கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
ஆசிரியர் பொதுமாறுதல் 2012-2013 விண்ணப்பம் பெறுவது தற்காலிகமாக நிறுத்தம்
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி1 / 2012, நாள். 27.04.2012.
2012
- 2013ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு
பொதுமாறுதல் வழங்குவதற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் தயார் நிலையில்
இருக்கும் பொருட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலக விளம்பர பலகையில் ஒட்டி
அதன் மூலம் ஆசிரியர்களிடம் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக
அறிவுரைகள் வழங்கப்பட்டது.
தற்போது
மேற்படி பணிகளை அடுத்த அறிவிப்பு பெறப்படும் வரை
நிறுத்தி வைக்கும்ப்படும்படி அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும்
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அரசு கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி : ஆசிரியர்களுக்கு அழைப்பு.
தமிழகத்தில்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் கேபிள் டிவி வழியாக புதிய அரசு
கல்வி ஒளிபரப்புச் சேவையை துவங்க உள்ளது. இந்த தொலைக்காட்சி வாயிலாக
மாணவர்களுக்கு கல்வியை அளிக்கும் நிகழ்ச்சிகளை தயாரிக்க ஆர்வமுள்ள
ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு
அறிவித்துள்ளது.
தினந்தோறும்
1 முதல் 12ம் வகுப்பு பாடத்திட்டங்களில் இருந்து பாடப்பகுதிகள் திறமை
வாய்ந்த ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட உள்ளது.
இதற்கான
கல்வி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பணியில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி
பயிற்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதில்
ஆர்வமும், ஆனுபவமும் உள்ள ஆசிரியர்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஆர்வமுள்ள ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு பயிற்சி நிறுவனத்திற்கு
அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை
அனுப்பியுள்ளது.
முப்பருவ கல்வி முறை குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி நிறைவு
முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை குறித்து,
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும்
பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பயிற்சி முடிவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் தேவராஜன் கூறியிருப்பதாவது:
வரும் கல்வியாண்டில் (2012-13), ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர், முழுமையான மதிப்பீட்டு முறை அமலுக்கு வருகிறது. இதையொட்டி, முப்பருவ கல்வி முறைக்கான பாட நூல்களையும், முழுமையான மதிப்பீட்டு முறைப்படி கற்பித்தல் மற்றும் மதிப்பீடு செய்வது குறித்து, ஆசிரியர்களுக்கான வழிமுறை கையேட்டையும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ளது.
புதிய திட்டம் குறித்து, மண்டல அளவில் அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. மேலும், 3,000 ஆசிரியர் பயிற்றுநர்கள், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஆகியோருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களை, ஒன்றிய கருத்தாளர்களாகக் கொண்டு, 26ம் தேதி 50 சதவீத ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மீதமுள்ள, 50 சதவீத ஆசிரியர்களுக்கு, 27ம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது. 412 ஒன்றியங்களில், இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தனியார் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மே இறுதி வாரத்தில் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் தேவராஜன் கூறியிருப்பதாவது:
வரும் கல்வியாண்டில் (2012-13), ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர், முழுமையான மதிப்பீட்டு முறை அமலுக்கு வருகிறது. இதையொட்டி, முப்பருவ கல்வி முறைக்கான பாட நூல்களையும், முழுமையான மதிப்பீட்டு முறைப்படி கற்பித்தல் மற்றும் மதிப்பீடு செய்வது குறித்து, ஆசிரியர்களுக்கான வழிமுறை கையேட்டையும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ளது.
புதிய திட்டம் குறித்து, மண்டல அளவில் அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கும், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. மேலும், 3,000 ஆசிரியர் பயிற்றுநர்கள், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஆகியோருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களை, ஒன்றிய கருத்தாளர்களாகக் கொண்டு, 26ம் தேதி 50 சதவீத ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மீதமுள்ள, 50 சதவீத ஆசிரியர்களுக்கு, 27ம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது. 412 ஒன்றியங்களில், இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தனியார் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மே இறுதி வாரத்தில் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.
April 27, 2012
நண்பனின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி
நண்பர் குருவின் வலைத்தளத்தை ஆனந்தவிகடனில் இடம்பெற செய்த விகடன் குழுமத்திற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்திக்கொள்கிறேன்.
நண்பா உன் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. தொடரட்டும் உனது புதுமையான படைப்பு.
வாழ்த்துக்கள் நண்பா...
வாழ்த்துக்கள்..
வித்தியாசமான செயல்களை செய்வதைவிட
செயல்களை வித்தியாசமாக செய்.
என்றும் நட்புடன்
ஜெய்.
ஆனந்தவிகடனில் இடம்பெற்ற நண்பர் குருவின் வலைப்பூவைக் காண
www.nilanilal.blogspot.in
நண்பா உன் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. தொடரட்டும் உனது புதுமையான படைப்பு.
வாழ்த்துக்கள் நண்பா...
வாழ்த்துக்கள்..
வித்தியாசமான செயல்களை செய்வதைவிட
செயல்களை வித்தியாசமாக செய்.
என்றும் நட்புடன்
ஜெய்.
ஆனந்தவிகடனில் இடம்பெற்ற நண்பர் குருவின் வலைப்பூவைக் காண
www.nilanilal.blogspot.in
TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் பகுதி 3
* பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க
* 'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.
* நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்
* குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்
* இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்
* தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
* 'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.
* நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்
* குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்
* இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்
* தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பொதுவான வழிமுறைகள் கையேடு
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சென்னை வெளியிட்டுள்ள தொடர்
மற்றும் முழுமையான மதிப்பீடு CONTINUOUS AND COMPREHENSIVE EVALUATION
பொதுவான வழிமுறைகள் கையேடு பெற இங்கு கிளிக் செய்க.cce click here
"தமிழாசிரியர்' என்பதை, "பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)' என குறிப்பிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக தமிழாசிரியர் கழக கோரிக்கைப்படி,"தமிழாசிரியர்' என்பதை, இனி,
"பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)' என ஆசிரியர்கள் குறிப்பிட பள்ளிக் கல்வித்
துறை உத்தரவிட்டுள்ளது. இனிமேல் "தமிழாசிரியர்' என எழுதாமல், அதற்கு
பதிலாக, "பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)' எனவும், அதே போல் பிற ஆசிரியர்கள்,
பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்), பட்டதாரி
ஆசிரியர் (வரலாறு) என, பாட வாரியாகக் குறிப்பிட வேண்டும். பெயர் மாற்றம்
செய்யப்பட்டதையே, வருகை பதிவேடு, ஆவணங்கள் உட்பட அனைத்திலும் குறிப்பிட
வேண்டும். இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, அந்த உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் எப்போது?
கடலூர், ஏப். 26:
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் குறைந்த ஊதியத்தில் பணி நியமனம்
செய்யப்பட்டு, தொழிற்கல்வி பாடப்பிரிவில் பாடம் கற்பிக்கும் தொழிற்கல்வி
ஆசிரியர்களின் சான்றிதழ்கள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர்
சரிபார்க்கப்பட்டும், இதுநாள் வரையில் பணி நிரந்தரம் ஆக்கப்படுவதற்கான எந்த
அறிகுறியும் தென்படாததால் விரக்தியில் உள்ளனர்.
கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி தலைமையில், ஒன்பது பேர் உறுப்பினர்களாக கொண்ட வல்லுனர் குழு அமைப்பு .
தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளைக் களைந்து, கல்வித் தரத்தை
மேம்படுத்துவதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தலைமையில், ஒன்பது பேரை
உறுப்பினர்களாக நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
குழுவின் பணிகள்:
* ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டங்களில் உள்ள குறைகளைக் கண்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை, அரசுக்குப் பரிந்துரை செய்தல்.
குழுவின் பணிகள்:
* ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டங்களில் உள்ள குறைகளைக் கண்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை, அரசுக்குப் பரிந்துரை செய்தல்.
10-ம் வகுப்பு புத்தகங்கள் ஏப்ரல் 26 முதல் விற்பனை.
பத்தாம்
வகுப்பு புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 26) முதல்
விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.
ஒரு புத்தகத்தின் விலை ரூ.70. ஒரு செட்டின் விலை ரூ.350 ஆகும்.
அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் புத்தகங்கள்
மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு நேரடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தப்
புத்தகங்களைப் பள்ளிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்கள் வியாழக்கிழமை முதல் மேற்கொள்ள உள்ளனர்.
April 26, 2012
ஆசிரியர் தகுதி தேர்வு மெட்டிரியல் தொகுப்பு!
TAMIL NADU TET MATERIALS AND QUESTION PAPERS | TAMIL NADU TRB MATERIALS AND QUESTION PAPERS |PLUS ONE STUDY MATERIALS AND QUESTION PAPERS | B.ED STUDY MATERIALS AND QUESTION PAPERS | M.ED STUDY MATERIALS AND QUESTION PAPERS | OTHER MATERIALS AND QUESTION PAPERS
ஆசிரியர் தகுதித் தேர்வு- அறிவியல் தொகுப்பு-பழம் மற்றும் காய்கறிகளின் தாவரவியல் பெயர்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவியல் தொகுப்பு |
சிறப்பு பி.எட் படிப்பும், பொது பி.எட் படிப்புக்கு சமமானதே: அரசு.
மாற்றுத்
திறனாளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் வழங்கப்படும் சிறப்பு
பி.எட்., படிப்பை பொது பி.எட்., படிப்போடு இணையாக்கி அரசு உத்தரவு
பிறப்பித்துள்ளது.
பி.எட்.,
படிப்பில், பார்வையற்ற குழந்தைகள் உள்ளிட்ட சிறப்புக் குழந்தைகளுக்கு
கல்வி கற்பிக்கும் வகையில், சிறப்பு பாடத்திட்டம் உள்ளது.
ஆசிரியர்களுக்கு 2012 - 2013-ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல் - விண்ணப்பங்கள் பெறுதல் சார்பான - அறிவுரை வழங்குதல் - சார்பு.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 200 / ஏ1 / இ2 / 2012, நாள். 23.04.2012
* மாறுதல் கோரும்
ஆசிரியர்களின் விண்ணபங்களை 25.04.2012 முதல் 28.04.2012-க்குள் மூன்று
பிரதிகள் பெற்று மாறுதல் விண்ணபத்தினை தலைமையாசிரியர் மேலொப்பம் இட்டு
30.04.2012 அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரடியாக
ஒப்படைக்க வேண்டும்.முப்பருவ தேர்வு முறை: 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பயிற்சி
முப்பருவ தேர்வு முறை திட்டம் தொடர்பாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை
பயிற்றுவிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் வரும் 26ம்
தேதி மற்றும் 27ம் தேதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் ஜூன் மாதம்
முதல் வாரத்தில் இப்பயிற்சி நடத்தப்படுகிறது.
டிஇடி : சமூக அறிவியல் வினா-விடை தொகுப்பு 3.
தமிழகத்தில்
ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு
ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை
வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி
வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.
மே 5-ல் சென்னையில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில மாநாடு.
தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், சென்னையில் வரும் மே 5-ம் தேதி மாநில மாநாடு மற்றும் கல்விக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் கோ.முருகேசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
April 25, 2012
ஆறாவது ஊதியக் குழு அமுல்படுத்தியத்தில் ஒரு சில பிரிவு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கான காரணங்கள்.
ஆறாவது ஊதியக் குழுவின் அமுல்படுத்தியத்தில் ஒரு சில பிரிவுஅரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கான
காரணங்கள் - அதற்கான அரசாணைகள் மற்றும் விளக்கங்கள் வரிசையாக கீழே
கொடுக்கப்பட்டுள்ளது.
* ஊதிய குறை தீர்க்கும் பிவிற்கு அனுப்ப வேண்டிய மாதிரி படிவம்.ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கு தயாராக தமிழ் வினா-விடை .
தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தங்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளும் வகையில்தமிழ் பாடத்திற்கான வினா விடைகளை வழங்கிவருகிறோம் படித்து பயன்பெறுங்கள்.
1. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுவது எந்த நூல் - திருக்குறள்
April 24, 2012
தபால் நிலையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில்,
தேர்வு செய்யப்பட்ட தபால் நிலையங்களில், ஆன்-லைனில் டி.என்.பி.எஸ்.சி.,
தேர்வுக்கு விண்ணப்பிக்க, சேவை துவக்கப்பட உள்ளது.
போலீஸ்
தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான விண்ணப்பங்கள், தபால் நிலையங்களில்
விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர, தங்க நாணயம் விற்பனை, மின்
கட்டணம் வசூல், வாக்காளர் விண்ணப்பம் என, தபால் நிலையங்களில் மக்கள்
சேவைக்கான பணிகள் துவங்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஊதிய குறை தீர்க்கும் பிரிவிற்கு அனுப்ப வேண்டிய மாதிரி படிவம்.
ஊதிய குறை
தீர்க்கும் மூன்று அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உரிய மனுக்களை
பெற்று பரிசீலித்து ஊதிய முரண்பாடுகள் களைவது குறித்து அரசுக்கு உரிய
பரிந்துரை அறிக்கையை அளிக்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஊதிய குறை தீர்க்கும் குழுவிடம் 04.05.2012-க்குள் கோரிக்கைகளை நேரடியாகவோ அல்லது dspgrc@tn.gov.in எனற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்ய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே
இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் ஊதிய முரண்பாடுகளை குறித்து கோரிக்கை மனு
ஒன்று PDF FORMAT-ல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து
தட்டச்சு செய்து E-MAIL முகவிரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும்
அப்படிவத்தில் தங்கள் கருத்துகளை சேர்க்க விரும்பினால் சேர்த்து 04.05.2012-க்குள் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு : கோரிக்கைகளை நேரடியாகவோ அல்லது E-MAIL முகவிரி மூலமோ அனுப்பவும்.
அப்படிவத்தில் தங்கள் பெயர் முகவரி,தொடர்பு எண் மற்றும் E-MAIL ஆகியவை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
மாதிரி படிவம் பதிவிறக்கம் செய்ய....முப்பருவ தேர்வு முறை: 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பயிற்சி
முப்பருவ தேர்வு முறை திட்டம் தொடர்பாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை
பயிற்றுவிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் வரும் 26ம்
தேதி மற்றும் 27ம் தேதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் ஜூன் மாதம்
முதல் வாரத்தில் இப்பயிற்சி நடத்தப்படுகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
ராமநாதபுரம் சம்பகுளத்தை சேர்ந்த செந்தில்வேல், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
புதுக்கோட்டை மாவட்டத்தில்
கொன்னகாடு பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன்.
தமிழகத்தில் 2010 ஆகஸ்ட் 23க்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள்,
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தமிழக அரசு 2012ல்
பிப்ரவரி 7ல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
முப்பருவ முழுமையான மற்றும் தொடர் மதீப்பீட்டு கல்வி (CCE) தொடர்பான ஒரு நாள் பயிற்சி.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ 2 / 2012, நாள். 23.04.2012.
முப்பருவ
முழுமையான மற்றும் தொடர் மதீப்பீட்டு கல்வி (CCE) தொடர்பாக மாநிலம்
முழுவதும் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 1
முதல் 5 வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்க
திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி
ஒன்றியத்திலுள்ள 50% ஆசிரியர்களுக்கு 26.04.2012 அன்றும் மீதமுள்ள 50%
ஆசிரியர்களுக்கு 27.04.2012 தேதியில் அந்தந்த ஒன்றியங்களில் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில் அனைத்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொள்ள அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு பயிற்சியினை ஆசிரியர்களுக்கு அளிக்கும் பொழுது கல்வி அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ 2 / 2012, நாள். 20.04.2012.
* தனியார் பள்ளி / கல்லூரி / ஒன்றியத்திலுள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய கல்வி நிறுவனம் பயிற்சி மையமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
* பயிற்சி மையங்களில் ஒவ்வொரு வகுப்பறையிலும் LCD PROJECTOR உரிய மின் இணைப்பு வசதியுடன் வழங்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும்.
* ஒரு அறைக்கு 40 முதல் 50 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் அறைகள் உள்ள நிறுவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
* காற்றாடி வசதிகளுடன் போதிய வெளிசத்துடன் இருத்தல் வேண்டும்.
* கேண்டின் வசதி இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
GENERATOR வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
* குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகியவை ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஏற்ப அமைய வேண்டும்.
* பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கான பயிற்சிப்படியினை பயிற்சி முடிந்தவுடன் முறைப்படி வழங்குதல் வேண்டும்.
April 23, 2012
பள்ளி மாணவர்களுக்கு சி புரோகிராம் பயிற்சி.
பள்ளியில்
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், தங்களது கோடை விடுமுறையைப்
பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளும் வகையில் சி புரோகிராம் பயிற்சியை அண்ணா
பல்கலைக்கழகம் அளிக்கிறது.
ஒரு வார கால இந்த பயிற்சியில் சி புரோகிராமின் அடிப்படை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் கற்றுக் கொடுக்கப்படும்.
மே மாதம் 15ம் தேதியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரிவாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இதற்குக்
கட்டணமாக ரூ.500 அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயருக்கு டிடியாக எடுக்க
வேண்டும். காலை 9 மணி முதல் 5 மணி வரை அண்ணா பல்கலையில் உள்ள ராமானுஜன்
கணினி மையத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
பல்கலைக்கழகங்களில்(தொலைத்தூரக்கல்வி) வாயிலாக பயிலும் இரட்டைப் பட்டங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ள விளக்கம்.
ஆசிரியர் தேர்வு வாரிய பொது தகவல் அளிக்கும் அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ஓ.மு.எண்.1464 /ஆ4 / 2011, நாள். 14.02.2012.
ஆசிரியர்
தேர்வு வாரியத்தின் பொது தகவல் அளிக்கும் அலுவலரால் அளிக்கப்பட்டுள்ள
14.02.2012 அன்றைய நாளிட்ட பதிலில் "தற்போதுள்ள நடைமுறைப்படி ஆங்கிலம்,
தமிழ் மற்றும் வரலாறு ஆகிய இரட்டைப்பட்டங்கள் பரிசீலிக்கப்படுகிறது". என குறுப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட கடிதத்தை பதிவிறக்கம் செய்ய...
தொழில்திறன் குறித்த பாடத்திட்டங்கள் பள்ளி, கல்லூரிகளில் இடம் பெறும்.
பள்ளி,
கல்லூரி மாணவர்களை தொழிற்திறன் மிக்கவர்களாக மாற்றும் வகையில், அதுகுறித்த
பாடங்கள் அமைக்கப்படும்'' என, மாநில திட்ட கமிஷன் உறுப்பினர் பாலகுருசாமி
தெரிவித்தார்.
அவர்
கூறியதாவது: தொழிற்கல்வி படித்தாலும், அறிவியல், கலைப்படிப்புகள்
படித்தாலும், மாணவர்கள் அதில் நிபுணத்துவம் பெறுவது குறைவு. வெறும்
படிப்பால், மதிப்பெண்ணால் பயனில்லை. இந்தியாவில் திறமை வாய்ந்த
தொழிலாளர்கள் கிடைப்பது கடினம். வரும் கல்வியாண்டிலிருந்து பள்ளி, கல்லூரி,
பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., பாடத்திட்டங்களில், தொழிற்திறனுக்கு
முக்கியத்துவம் தரப்படும்.
Village Administrative Officer, 2009 - 2010 ,(Date of Written Examination:20.02.2011)
Village Administrative Officer,
2009 - 2010
(Marks obtained
by the candidates in the Written Examination)
(Date of
Written Examination:20.02.2011)
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதை எதிர்த்து வழக்கு - அரசு பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
இடைநிலை
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை
நேரடியாக நிரப்புவதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித் துறை
செயலாளர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
திண்டுக்கல்
மாவட்டம் சானர்ப்பட்டி அருகே உள்ள மலைப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பள்ளியில்
இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் திரு. எம். கோபால் என்பவர் மதுரை
உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட மனுவில் கூறி இருப்பதாவது : -
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கீழ் ஏராளமான நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன.
ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை.
தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தங்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளும் வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்துவழங்கிவருகிறோம் படித்து பயன்பெறுங்கள்.
1. ஹரப்பா நாகரிகம் - நகர நாகரிகம்
2. திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு - கி.மு.31
April 22, 2012
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதத்தில் நடைபெறாது.
முப்பருவ
மற்றும் தொடர் மதீப்பீட்டு முறைக்கான பயிற்சி மே மாதத்தில் நடைபெறும் என
பரவலாக பேசப்பட்டு வந்தது. அதே சமயம் ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகத்
(தொலைத்தூர கல்வி) தேர்வு மற்றும் விடுமுறை காரணங்களுக்காக தள்ளி வைக்க
ஆசிரியர்களின் சார்பில் பல்வேறு தரப்பு அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இது
குறித்து மாநில அளவில் முப்பருவ மற்றும் தொடர் மதீப்பீட்டு முறைக்கான
பயிற்சியில் பங்குபெற்ற ஆசிரியர் ஒருவர் கூறுகையில் ஊராட்சி ஒன்றிய / அரசு
பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கு மே மாதத்தில் பயிற்சி கிடையாது எனவும், அதே
சமயம் மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கு மே
மாதத்தில் பயிற்சி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வி செயலர்
பயிற்சி அரங்கில் தெரிவித்தாக கூறினார்.
மேலும் 25.04.2012 அன்று முப்பருவ மற்றும் தொடர் மதீப்பீட்டு முறை சம்பந்தமாக அறிமுகப்பயிற்சி RESOURCE PERSON TRAINING ஒரு நாள் நடைபெறும் என்றும், தொடக்க / அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 1 முதல் 5 வகுப்பு நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு நாள் பயிற்சி 26.04.2012 மற்றும் 27.04.2012 ஆகிய இரண்டு கட்டங்களாக மாநில முழுவதும் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு : தமிழ் வினா-விடை.
ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தங்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளும் வகையில் தமிழ் பாடத்திற்கான வினா விடைகளை வழங்கிவருகிறோம் படித்து பயன்பெறுங்கள்.
திருக்குறள்
திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவை
1. அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்
2.பொருட்பால் - 70 அதிகாரங்கள்
3.காமத்துப்பால் - 25 அதிகாரங்கள்
திருக்குறள் 1330 குறள்களைக் கொண்டது.
திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள்
1. பரிமேலழகர்
2. தருமர்
3. மல்லர்
4. மணக்குடவர்
5. திருமலையர்
6. தாமத்தர்
7. கவிப்பெருமாள்
8. பரிதி
9. காளிங்கர்
10. நச்சர்
T.E.T: தனி இயக்குனர்
விருதுநகர் : ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு
வாரியத்திற்கு இயக்குனர் மற்றும் முதன்னை கல்வி அலுவலர் பணியிடங்களை
தோற்றுவித்து ,அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் அனைவருக்கும்
கல்வி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும்
தகுதி தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு , உதவி பெறும்
பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தும் பணி தீவிரமாக நடந்து
வருகிறது.
2010 ஆக., 23 பிறகு பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியராக பணியை தொடர முடியும் என்பதால், இதற்காக ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி, தேர்வு முடிவுகள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
2010 ஆக., 23 பிறகு பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியராக பணியை தொடர முடியும் என்பதால், இதற்காக ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி, தேர்வு முடிவுகள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
April 20, 2012
தகுதி தேர்வில் தேறாத 151 ஆசிரியர்கள் நீக்கம்.
பீகார் மாநில கல்வித்துறை நடத்திய தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற தவறிய 151 ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பீகார்
மாநில அரசு மாணவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்கும் நோக்கத்தில் 2010
மற்றும் 2011ம் ஆண்டுகளில் அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி
தேர்வு நடத்தியது
இதில்
ஆங்கிலம், கணிதம், இந்தி மற்றும் பொது அறிவு தொடர்பான கேள்விகள் ஐந்தாம்
வகுப்பு தரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுகளுக்கான முடிவுகளை
வெளியிட்ட பீகார் கல்வித்துறை 151 ஆசிரியர்கள் தேர்ச்சிப் பெற தவறியதாக
கூறியது. அவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்துள்ளது.
தொடக்கக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு 2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல்
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி1 / 2012, நாள். 19.04.2012.
2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் வழங்குவதற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் இருக்கும் பொருட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலக விளம்பர பலகையில் ஒட்டி அதன் மூலம் ஆசிரியர்களிடம் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக கீழ்காணும் அறிவுரைகள் வழங்கபடுகின்றன.
2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் வழங்குவதற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் இருக்கும் பொருட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலக விளம்பர பலகையில் ஒட்டி அதன் மூலம் ஆசிரியர்களிடம் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக கீழ்காணும் அறிவுரைகள் வழங்கபடுகின்றன.
*30.04.2012 க்குள் ஆசிரியர்கள் தங்களது மாறுதல் விண்ணப்பங்கள் உரிய வழியில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
*05.05.2012 அன்று அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களிடமிருந்து விண்ணபங்களை பெற்று 07.05.2012 க்குள் சரிப்பார்த்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஏ, பி மற்றும் சி பதிவேடுகள் தயார் செய்ய வேண்டும்.
*10.05.2012 அன்று
மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணபங்களை பரிசீலித்து
சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
*மேற்கூறிய
அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொண்டு 2012 - 2013 ஆம் ஆண்டு
ஆசிரியர்கள் மாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறுதல் சார்ந்த பணியினை முடித்து
தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும்
இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
*மாறுதல் சார்பான அரசாணை பெறப்பட்ட உடன் விரிவான அறிவுரைகள் வழங்கப்படுமென அறிவிக்கப்படுகிறது. தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி1 / 2012, நாள். 19.04.2012 மற்றும் மாதிரிப் படிவம் பதிவிறக்கம் செய்ய....
ஜூன் 1 2012 முதல் ஆசிரியர் வருகையை குறுஞ்செய்தி (SMS) மூலம் பதிவு.
ஆசிரியர்களின்
செயல்ப்பாட்டினை முறையாக கண்காணிப்பதற்கு அவர்களுடைய வருகைப் பதிவினை
குறுஞ்செய்தி (SMS) மூலம் கண்காணிப்பதற்கு கணினி பயன்ப்பாட்டு
மென்பொருள் உருவாக்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர்
அவர்கள் அறிவித்துள்ளார். இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு பள்ளிகள்
திறக்கும் நாளான 2012, ஜூன் 1 ஆம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வரும்
ஆசிரியர் மற்றும் ஆசிரியர்ல்லாதோரின் வருகையை குறுஞ்செய்தி (SMS) மூலம்
தலைமையாசிரியர் மையக்கட்டுப்பட்டு அறைக்கு அனுப்பி பதிவு செய்வார்.
அங்கிருந்து வருகைப் பதிவுசார் தகவல் அனைத்து பள்ளிக்கல்வித் துறை உயர்
அலுவலர்களுக்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். இது பள்ளி
ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்து ஒழுங்குப்படுத்த உதவும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை.
தமிழகத்தில்
ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு
ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை
வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி
வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.
சமூக அறிவியல்
1. சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
கல்விக்கென்றே புதிய சேனல்: அமைச்சர்.
கல்விக்கென்றே ஒரு புதிய தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு துவக்கவுள்ளது.
இத்தகவலை, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி சட்டசபையில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக
அமைச்சர் கூறியதாவது: இதன்மூலமாக, பள்ளி முடிந்தபிறகும், பாடங்களை
வீட்டிற்கு கொண்டு சென்று மாணவர்களுக்கு கற்பிக்க முடியும்.
செமினார்கள்,
கலந்துரையாடல்கள் மற்றும் பயிற்சிகள் உள்பட, கல்வித்திறனை அதிகரிக்கும்
பலவிதமான அம்சங்களை இந்த சேனல் கொண்டிருக்கும். இவ்வாறு அமைச்சர் சிவபதி
தெரிவித்தார்.
April 19, 2012
தமிழ்நாட்டில் புதிதாக் இரண்டு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 11 புதிய கலை அறிவியல் கல்லூரிகளும், 7 புதிய பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளும் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
தமிழக
சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிக்கை ஒன்றை
வாசித்தார். இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் செங்கிலிப்பட்டியிலும்,
தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை ஊராட்சியிலும் பொறியியல் கல்லூரிகள் இந்த
ஆண்டு தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் உள்ள
ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, விழுப்புரம்
மாவட்டத்தில்
உள்ள சங்கராபுரம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, அரியலூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, வேலூர் மாவட்டத்தில் உள்ள
ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படும்
என்றும் அவர் தெரிவித்தார். எடப்பாடி, வேடசந்தூர், மொடக்குறிச்சி,
திருமங்கலம், திருவொற்றியூர், பரமகுடி, கடையநல்லூர், அருப்புக்கோட்டை,
நாகப்பட்டினம், அரக்கோணம் ஆகிய 11 இடங்களில் கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.ஏப்.,24ல் துவங்குகிறது 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி.
பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, ஏப்., 24ல் துவங்குகிறது.
பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.,4 ல் துவங்கி நடந்து வருகிறது. ஏப்., 23 ல்
நிறைவு பெறுகிறது. இதில், 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவர்கள் தேர்வு
எழுதியுள்ளனர்.
அரசு பாடநூல் புத்தகங்களுக்கான விலை நிர்ணயம்.
தமிழகம்
முழுவதும் அரசு பாடநூல் புத்தகங்களை, தனியார் பள்ளிகள் மற்றும் கடைகளில்
விற்பனை செய்வதற்கு விலை நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்
வகுப்பிற்கு 200 ரூபாயும், 8ம் வகுப்பிற்கு 300 ரூபாய் கட்டணமும் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை அடுத்த மாதம் முதல் தேதியில்
இருந்து விடப்படுகிறது. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் ஏப்ரல் 30ம்
தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன்
மாதம் முதல் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிக்கூடங்களில் ஆங்கிலவழி பிரிவுகள் தொடக்கம்: இந்த ஆண்டு புதிதாக 14,349 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி அறிவிப்பு
இந்த ஆண்டு அரசு பள்ளிக்கூடங்களில் புதிதாக 6,768 பட்டதாரி
ஆசிரியர்கள் உள்பட 14,349 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று
சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி அறிவித்தார்.
பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் கிடையாது - அமைச்சர் சிவபதி
"வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட
மாட்டாது,'' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி திட்டவட்டமாகத்
தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நடந்த விவாதத்தில், மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேசும் போது,""பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வால், அவர்கள் பாதிக்கப்படுவர். வேண்டுமானால், பதிவு மூப்பில் இருப்பவர்களுக்கு ஒரு பயிற்சி கொடுத்து, அவர்களை பணியில் சேர்த்துக் கொள்ளலாம்,'' என்றார்.
மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் ஆகியோரும், இதே கருத்தை வலியுறுத்தினர்.
இதற்கு, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி கூறும் போது,""ஆசிரியர் நியமனம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பை, தமிழக அரசு கடைபிடிக்கும். ஆசிரியர் நியமனம், தேர்வு முறையில் தான் இருக்கும். பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட மாட்டார்கள்,'' என்றார்.
தமிழக சட்டசபையில் நடந்த விவாதத்தில், மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேசும் போது,""பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வால், அவர்கள் பாதிக்கப்படுவர். வேண்டுமானால், பதிவு மூப்பில் இருப்பவர்களுக்கு ஒரு பயிற்சி கொடுத்து, அவர்களை பணியில் சேர்த்துக் கொள்ளலாம்,'' என்றார்.
மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் ஆகியோரும், இதே கருத்தை வலியுறுத்தினர்.
இதற்கு, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி கூறும் போது,""ஆசிரியர் நியமனம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பை, தமிழக அரசு கடைபிடிக்கும். ஆசிரியர் நியமனம், தேர்வு முறையில் தான் இருக்கும். பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட மாட்டார்கள்,'' என்றார்.
பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்
பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:
- தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி ஆகியவை சிறப்புடன் செயல்பட, நடப்புக் கல்வியாண்டில், 14 ஆயிரத்து 349 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
April 18, 2012
தமிழக அரசு பள்ளிகளின் சீருடை நிறம் மாறுகிறது.
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை நிறம் மாற்றப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக
அரசுப் பள்ளிகளில், பொதுவாக, மாணவர்களுக்கு, காக்கி நிற கால் சட்டையும்,
வெள்ளை நிற மேல் சட்டையும், மாணவிகளுக்கு, கீழாடையாக நீல நிறத்திலும்,
மேலாடையாக வெள்ளை நிறத்திலும் தற்போது வரை இருந்துவருகின்றன.
ஆசிரியர்களுக்குத் தேவையான வினா-விடை
தமிழகத்தில்
ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு
மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கி வருகிறோம். அதன்படி அடுத்த
வினாவிடைத் தொகுப்பை இங்கு காணலாம்.
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்கள்
1. அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும்
April 17, 2012
ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - அனைத்து பள்ளி ஆசிரியர்களின் முழு விவரங்கள் சேகரித்தல்.
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 1696 / அ3 / 2012, நாள். 14.04.2012
ஆசிரியர்
பயிற்சி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு -
அனைத்து வகை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க ஏதுவாக அனைத்து
பள்ளிகளின் ஆசிரியர்கள் முழு விவரங்களை CD மற்றும் FORMAT - III உடன்
அனைத்து ஆசிரியர்களின் ஏப்ரல் மாத வருகைப் பதிவேட்டின் நகல் மற்றும்
அனைத்து ஆசிரியர்களின் கால அட்டவணை நகல் ஒன்றையும் ஒப்படைக்க வேண்டும்.
TO DOWNLOAD FORMAT III - EXCEL SHEET CLICK HERE....
டி.இ.டி., விண்ணப்பங்கள் சென்னையில் பரிசீலனை
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், மாநிலம் முழுவதிலும்
இருந்து, சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு
வரப்படுகின்றன. டி.இ.டி., தேர்வுக்காக 12 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை
ஆனபோதும், 8 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே பூர்த்தியான நிலையில்
பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டங்களில் இருந்து, இந்த
விண்ணப்பங்கள், சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வரத்
துவங்கியுள்ளன.
விண்ணப்பங்கள் அனைத்தும், இந்த மையத்தில் வைத்து, இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள், பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆகிய இரண்டும் பிரிக்கப்படுகின்றன. பின், விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இதன் விவரங்களை, "ஸ்கேன்' செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன. ஜூன் 3ம் தேதி நடக்கும் தேர்வு, தள்ளிப்போகும் என ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ள நிலையில், இது குறித்த அறிவிப்பு, நாளை நடைபெறும் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையில் எதிர்பார்க்கலாம். தேர்வு தள்ளி வைக்கப்படாத பட்சத்தில், மே மூன்றாவது வாரத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்' அனுப்பும் பணி நடைபெறும்.
விண்ணப்பங்கள் அனைத்தும், இந்த மையத்தில் வைத்து, இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள், பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆகிய இரண்டும் பிரிக்கப்படுகின்றன. பின், விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இதன் விவரங்களை, "ஸ்கேன்' செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன. ஜூன் 3ம் தேதி நடக்கும் தேர்வு, தள்ளிப்போகும் என ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ள நிலையில், இது குறித்த அறிவிப்பு, நாளை நடைபெறும் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையில் எதிர்பார்க்கலாம். தேர்வு தள்ளி வைக்கப்படாத பட்சத்தில், மே மூன்றாவது வாரத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்' அனுப்பும் பணி நடைபெறும்.
எம்.எஸ்சி. அல்லது எம்.சி.ஏ. படிக்கலாமா?
பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு எம்.சி.ஏ. செல்வதே
பொதுவாக நல்ல வாய்ப்புகளைத் தருவதாக இருக்கிறது. ஏனெனில் பெரும்பாலான
நிறுவனங்கள் எம்.எஸ்சியை விட எம்.சி.ஏ. படித்திருப்பவரைத் தான்
விரும்புகின்றன. எனினும் வெறும் எம்.சி.ஏ. மட்டுமே இன்றைய சூழலுக்குப்
பொருந்துவதில்லை.
வெப் டெவலப்மென்ட் படிப்புகளான ஜாவா, ஆரக்கிள், வி.பி.நெட்., சி#, ஏஎஸ்பி.நெட். போன்றவற்றில் சிலவற்றை எம்.சி.ஏ. படிக்கும் போதே உங்களது மகள் படிக்கலாம். இது சாப்ட்வேர் டெவலப்மென்ட் துறைக்குச் செல்ல அவருக்கு உதவும். நெட்வொர்க்கிங் துறைக்குச் செல்ல அவர் விரும்பினால் அதற்கேற்ப எம்.சி.எஸ்.இ., சி.சி.என்.ஏ. போன்றவற்றில் சிறப்புப் பயிற்சியைப் பெறலாம். பணியில் சேர்ந்து சில ஆண்டுகளில் அவர் ஐ.டி. முக்கியப் பாடமாகக் கொண்டு எம்.பி.ஏ. படிப்பையும் மேற்கொள்ளலாம். இது இப்போது தொலை தூர முறையில் கிடைக்கத் துவங்கியுள்ளது.
வெப் டெவலப்மென்ட் படிப்புகளான ஜாவா, ஆரக்கிள், வி.பி.நெட்., சி#, ஏஎஸ்பி.நெட். போன்றவற்றில் சிலவற்றை எம்.சி.ஏ. படிக்கும் போதே உங்களது மகள் படிக்கலாம். இது சாப்ட்வேர் டெவலப்மென்ட் துறைக்குச் செல்ல அவருக்கு உதவும். நெட்வொர்க்கிங் துறைக்குச் செல்ல அவர் விரும்பினால் அதற்கேற்ப எம்.சி.எஸ்.இ., சி.சி.என்.ஏ. போன்றவற்றில் சிறப்புப் பயிற்சியைப் பெறலாம். பணியில் சேர்ந்து சில ஆண்டுகளில் அவர் ஐ.டி. முக்கியப் பாடமாகக் கொண்டு எம்.பி.ஏ. படிப்பையும் மேற்கொள்ளலாம். இது இப்போது தொலை தூர முறையில் கிடைக்கத் துவங்கியுள்ளது.
April 5, 2012
ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படுவார்கள் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
"ஒரே ஒரு தேர்வு தான்; தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில் அறிவித்தார்.
புதிய அரசாணை விவரம்:கொள்கை மாற்றம் குறித்து, கடந்த 28ம் தேதியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
"ஒரே ஒரு தேர்வு தான்; தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில் அறிவித்தார்.
புதிய அரசாணை விவரம்:கொள்கை மாற்றம் குறித்து, கடந்த 28ம் தேதியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
April 4, 2012
பள்ளிசெல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி SSA மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந. க.எண். 390 / அ 2 / ப செ கு / அ க இ / 2011 நாள். 14.03.2012.
அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2012 - 13 ஆம் ஆண்டில் பள்ளி செல்ல குழந்தைகள் மற்றும் மாற்று திறன் கொண்ட குழந்தைகள் - கணக்கெடுப்பு மற்றும் ஆரம்பக்கல்வி பதிவேடு புதுப்பித்தல் - சார்பு.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறும் கடைசி நாள் 12-ந் தேதி வரை நீட்டிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளாக 4.4.2012 (இன்று) என குறிப்பிடப்பட்டது. தற்போது பல்வேறு விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாளை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வந்ததை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விண்ணப்பதாரர்களின் நலன் கருதி ஒரு வாரம் நீட்டிக்க ஆணை வழங்கியுள்ளார்.
அதன் அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)