About Me

My photo
Salem, Tamilnadu, India
M.Sc,B.Ed, Teacher

May 30, 2012

2012 - 2013 SSAன் வின் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம் - இயக்குனரின் கடிதம்

இடைநிலைக் கல்வி - அரசு உதவி பெறும் பள்ளி - முதன்மை பாடத்தினை கொண்டு பி.எட்., முடித்தவர்களுக்கு மட்டும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு - RTI கடிதம் மூலம் தெளிவுரை.

பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) செயல்முறைகள், சென்னை - 06                            
ந.க.எண். 75417 / டி2 / இ2 / 2012, நாள்.   .12.2011
     

பொருள் :
இடைநிலைக் கல்வி - உதவி பெறும் பள்ளி - தகவல்               அறியும் உரிமைச் சட்டம் - 2005-ன் கீழ் விபரங்கள் கோருதல் சார்பு.
பார்வை :
உதவிப்பதிவாளர், தமிழ்நாடு தகவல் ஆணையம் தேனாம்பேட்டை அவர்களின் ஆணை எண்.26088 / C / 2011, நாள். 28.08.2011
                                                                      **************
      பார்வையில் காணும் கடிதத்தின் வாயிலாக  திருமதி. ஜீவாகமலக்கண்ணன் என்பார் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி கோரியுள்ள தகவல்களுக்கு பின்வருமாறு விபரம் அளிக்கப்படுகிறது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு : ஆன்லைனில் நாளை துவக்கம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளிவந்தது. கடந்தாண்டை போலவே நடப்பாண்டும் மதிப்பெண் பட்டியில் வழங்கும் போது சம்பந்தப்பட்ட பள்ளியிலேயே மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக ஆன்லைன் பெயர் பதிவு செய்யும் முறை குறித்து பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கோவையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 01.06.2012 அன்று உள்ளவாறு ஆசிரியர்களின் காலிப்பணியிட விவரங்கள் கேட்டு இயக்குனர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க.எண். 12570 / டி1 / 2012, நாள். 28.05.2012.
01.06.2012 அன்று உள்ளவாறு ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்  காலியாக உள்ள ஆசிரியர்களின் காலிப்பணியிட விவரங்களை உரிய படிவத்தில் தட்டச்சு செய்து 31.05.2012க்குள் தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அரசாணை எண். 193-ன் படி கூடுதல் தேவையுள்ள பள்ளிகளின் பெயர் பட்டியலை பதவி வாரியாகவும் பாடவாரியாகவும் கொண்டு வர உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பு : அரசாணை எண். 15 பள்ளிக்கல்வித்துறை நாள். 23.01.2012-ன் படி தோற்றுவிக்கப்பட்ட பணியிடத்தினை குறிப்பில் காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

May 29, 2012

பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆசிரியர் பொது மாறுதல் - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தமிழக ஆணை வெளியீடு.

அரசாணை (டி1) எண். 158 பள்ளிக்கல்வித்(இ1)துறை 
நாள்.18.05.2012 பள்ளிக்கல்வி -  2012 - 13 ஆசிரியர்  பொது மாறுதல் - 
ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் 
மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் கடைபிடிக்க 
வேண்டிய நெறிமுறைகள் குறித்து  தமிழக ஆணை வெளியிட்டுள்ளது.
உபரி ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் செய்த பின்னரே 
பொது மாறுதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு பணி
நிரவல் செய்யும் போது தொடக்கப்பள்ளிகளில் குறைந்தது இரு 
ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

பணிகள் அரைகுறை: டி.இ.டி., தேர்வு ஜூலை 12க்கு தள்ளிவைப்பு: டி.ஆர்.பி., திடீர் அறிவிப்பு

கேள்வித்தாள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாததால், ஜூன் 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., தேர்வு, ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தேதி மாற்றம்:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு:ஜூன் 3ம் தேதி டி.இ.டி., தேர்வு நடைபெறும் என, மார்ச் 7ம் தேதி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தேர்வுக்கான பணிகள் நடந்து வரும் நிலையில், தேர்வர்களிடம் இருந்து, அரசுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், "தேர்வை தள்ளி வைக்க வேண்டும்,' என, தொடர்ந்து கோரிக்கை வந்தது.தேர்வுக்கு தயாராவதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளது என்றும்; டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களே, வேறு பல தேர்வுகளை எழுத இருப்பதாக தெரிவித்து, தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, டி.இ.டி., தேர்வு, ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அரசு வேலை நாளில் இத்தேர்வு நடைபெறுவதால், அதற்கேற்ப உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் கூறப்பட்டது.

May 24, 2012

TET தேர்விற்கான கணித வினா விடைகள்

கடந்த ஆட்சியல் நியமனம் பெற்றவர்களுக்கு டி.இ.டி. தேர்விலிருந்து விலக்கு!

       கடந்த ஆட்சியில் அறிக்கை வெளியிடப்பட்டு, ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருக்கும், டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விளக்கம்: தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளபடி, 2010, ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகி, அதன்பின் பணி நியமனம் செய்யப்பட்ட, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும், டி.இ.டி., தேர்வு எழுதத் தேவையில்லை. 

தொடக்கக் கல்வி - ஆங்கில வழி இணைப்பள்ளிகள் - ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி தெரிவு செய்ய உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 11640 / இ1 / 2012, நாள். 21.05.2012
முதல் வகுப்பில் அதிக மாணவர்களை எண்ணிக்கை கொண்ட ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி வீதம் பள்ளிகளை தெரிவு செய்து விவரங்களை அனுப்புமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி 
அலுவலர்களுக்கும்  தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறையில் 6,7,8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி.

மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ2 / 2012, நாள். 15.05.2012
தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறையில் 6,7,8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை  ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்தல்.
பயிற்சி நடைபெறும் நாள். 28.05.2012 முதல் 31.05.2012 வரை
பயிற்சி நடைபெறும் இடம் : நான்கு ஒன்றியங்களை ஒருங்கிணைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி மையம்.

விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறு மதிப்பீடு விண்ணப்பம் பெற...

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சில மாணவர்கள் தங்களது தேர்வு முடிவிலோ அல்லது மதிப்பெண்ணிலோ தவறு இருக்கலாம் என்று கருதினால் விடைத்தாள் நகல் பெறலாம். அல்லது மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

May 22, 2012

11432 அங்கன்வாடி காலி பணியிடங்கள் நிரப்ப அரசு ஆணை

கல்வித் அரை தகுதி பத்தாம் வகுப்பு, வயது வரம்பு 25  முதல் 35 வரை. அங்கன்வாடி பணியாளர் , குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும்உதவியாளர் என மூன்று வித பணியிடங்களுக்கு 11432 பேர் தேர்ந்தெடுக்க பட உள்ளனர் .
மேலும்  விவரம் அறிய  இங்கே கிளிக் செய்து அரசின் செய்தி  வெளியீட்டை படியுங்கள்.

 இங்கே கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்துக் கொள்ளுங்கள் .

+2 RESULTS 2012 MULTIPLE LINKS

குறைந்தபட்ச கட்-ஆப் மதிப்பெண் விவரம்

மே 22ம் தேதி காலை 11 மணியளவில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், பொறியியல் படிக்க விரும்பும் மாணவ, மாணவியர்கள் எவ்வளவு கட்-ஆப் மதிப்பெண் எடுத்தால் எந்த கல்லூரியில் எந்த பாடப்பிரிவில் சேர முடியும் என்ற விவரத்தை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பாடப்பிரிவுகள் தனித்தனியாக வழங்கப்பட்டு, அவற்றில் சேர ஒவ்வொருப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், எவ்வளவு கட்-ஆப் மதிப்பெண் எடுத்தால் சேர்க்கை பெறலாம் என்ற விவரம்  மாணவர்களின் வசதிக்காக அளிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யலாம்.

கட்-ஆப் விவரத்தைப் பார்க்க

5 இடங்களில் விடைத்தாள் நகல், மறுகூட்டல் விண்ணப்பங்கள் விற்பனை

சென்னை: சென்னையில், ஐந்து இடங்களில், பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் என, அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
சென்னையில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள்:

சென்னையில், ஐந்து இடங்களில், பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் விற்பனை.


சென்னையில், ஐந்து இடங்களில், பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் என, அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
சென்னையில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள்:
1. ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.
2. மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை(தெற்கு) காந்தி இர்வின் சாலை, எழும்பூர்.

May 21, 2012


              யர்ந்த இலக்கை நோக்கி உந்திச் செல்வதே வாழ்க்கை. ஒவ்வொரு நொடியையும் தன்னை மேன்மைப்படுத்திக் கொள்ளும் உன்னதப் பயணமாக அது மலர வேண்டும். கல்வியும், அறிவும் அதை உறுதிப்படுத்தும் சாதனங்கள் மட்டுமே. படிக்காமலேயே அந்த நிலையை அடைய முடியுமென்றால் கல்லூரியைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. பல்கலைக் கழகங்களைப் பற்றியும் அக்கறை கொள்ள அவசியமில்லை.

தினமலர் - TET இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு

Click Here and register Your Details To Take Test

கல்வி உரிமை சட்டம், பிரிவு 2(n) கீழ் அனைத்து பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுதல் என்பது முக்கியமான தகுதிகளில் ஒன்று என்பது நீங்கள் அறிந்ததே.
தமிழ் நாடு ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்பதற்கு உதவியாக தினமலர், கல்விமலர் மற்றும் எவரோன் இணைந்து இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு மே 18 முதல் மே 20 வரை நடத்துகிறது. இந்த இலவச தேர்வானது, தேர்வு எழுதும் தேர்வாளர்களின் தேவையை கருத்தில்கொண்டு நடத்தப்படுகிறது.
தாங்கள் இந்த இலவச மாதிரி தேர்வை கீழ்கண்ட இடங்களில் எடுத்து கொள்ளலாம்:
மாதிரி தேர்வு மையங்கள் 

தொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

முன்னுரிமை பட்டியல், பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் அனைத்து ஒன்றியங்களிலும் சரியாக தயாரிக்கப்பட வேண்டும் என்றும்,
தயாரிக்கப்பட்ட பட்டியல்களை ஒன்றியம் மாற்றி சரிப்பார்க்கப்பட்டு, சரியாக உள்ளதா என ஆய்வு செய்த பிறகு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற்று இயக்ககத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும்,
தொடக்கக் கல்வித் துறையை சார்ந்த  ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரோட்டில் நடந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆய்வு கூட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளதாக கல்வித்துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Director Grade - I in Government Higher Secondary School for the year 2011 - 12

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006


Direct Recruitment of Post Graduate Assistants Physical Direct 
Grade - I in Government Higher Secondary School for the year 2011 - 12

 I. List of Admitted candidates                                      -        150740
2. Subject-wise list of candidates admitted for the examination


Subject

Code

Subject

No. of

candidates
12PG01

Tamil

28846
12PG02

English

13007
12PG03
Mathematics

20755
12PG04

Physics

11627
12PG05

Chemistry

11485
12PG06

Botany

8385
12PG07

Zoology

10322
12PG08

History

16917
12PG09

Geography

1218
12PG10

Economics

8774
12PG11

Commerce

15539
12PG13

Political Science

47
12PG14
Home Science

230
12PG15
Indian Culture
20
12PG19
Physical Director
3512
12PG21
Telugu

39
12PG51
Urdu 17
  Total

150740
 3. List of Rejected candidates                    -                               1923

Date of Examination: 27.05.2012 Timing: 10:00 A.M to 01:00 P.M

           


Dated: 19-05-2012


Chairm

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY 2012 - HALL TICKETS.

DEPARTMENTAL EXAMINATIONS-HALL TICKETS

Month Download Hall Tickets for... Current Status
  May Departmental Examinations May 2012 Online Up to
30 Jun 2012

May 19, 2012

தமிழகத்தில் முப்பருவ கல்வி முறை அமல் : கல்வி ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பேட்டி


"தமிழகத்தில், உள்ள அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், ஜூன் முதல் தேதியில் இருந்து, முப்பருவ கல்வி முறையும், தொடர் மதிப்பீட்டு முறையும் அமல்படுத்தப்படும்' என, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் தேவராஜன் கூறினார்.

பொள்ளாச்சியில் நடந்த மாநில அளவிலான பயிற்சி முகாமில் பங்கேற்ற பின் நிருபர்களிடம் தேவராஜன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் நடப்பாண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களின் பாடச்சுமை, மன சுமையை குறைக்கும் வகையில் முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது. ஜூன் முதல் செப்., மாதம் வரை முதல் பருவம், அக்., முதல் டிச., மாதம் வரை இரண்டாம் பருவம், ஜன., முதல் ஏப்., மாதம் வரை மூன்றாம் பருவம் என, கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனி பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சமச்சீர் பாடப்புத்தகத்தில் உள்ள பிழைகள் திருத்தம் செய்யப்பட்டு, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஆசிரிய பயிற்றுனர்களுக்கு ஒரு நாள் CCE பயிற்சி அந்தந்த மாவட்ட DIET ல் 22.5.12 அன்று நடைபெறுகிறது

fore  more details CLICK here and download SCERT Director Proceeding

தொடக்கக்கல்வி - இலவச பாடநூல்கள் 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் பெற்று வழங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.


மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

1.1.2011 முன்னுரிமைப் பட்டியலிலுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

அரசாணை  எண். 15 பள்ளிக்கல்வித்துறை நாள். 23.1.2012-ன் படி உருவாக்கப்பட்ட 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 4 மாதங்கள் ஆகியும் பதவி உயர்வு அளிக்கப்படாத சூழ்நிலையில்  தமிழகம் முழுவதும் தொடக்கக்கல்வி துறையின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். பதவி உயர்வு வழங்காததை எதிர்த்து 17 இடைநிலை ஆசிரியர்கள் சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு  விசாரணை கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த நிலையில் தற்பொழுது சம்பந்தப்பட்டவர்கள் அளித்த மனுக்களை பரிசீலனை செய்து பதை உயர்வு வழங்கி உரிய உத்தரவு 8 வாரத்திற்குள் பிறப்பிக்க தொடக்கக்கல்வ்வி இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சற்று நிம்மதி
அடைந்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 5ம் தேதி நடத்திய குரூப் 1 - சர்வீஸ்  முதன்மைநிலை தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் ஜுலை மாதம் 28 மற்றும் 29ம் தேதிகளில் சென்னையில் முக்கிய எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.தேர்வு குறித்த விவரங்கள் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
TO VIEW GROUP - I RESULTS CLICK HERE...

டி.இ.டி., தேர்வு தேதியில் மாற்றம் கிடையாது


சென்னை : ""டி.இ.டி., தேர்வு, திட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி நடைபெறும். இதில், எவ்வித மாற்றமும் கிடையாது,'' என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறினார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மாற்றமில்லை : ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,), ஜூன் 3ம் தேதி நடைபெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு, வேறு தேதிக்கு மாற்றப்படுமா என்பது குறித்து, தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும், திட்டமிட்டபடி நடந்து வருகின்றன. எனவே, ஜூன் 3ம் தேதி டி.இ.டி., தேர்வு நடைபெறும்; இதில், எவ்வித மாற்றமும் கிடையாது.

ஆசிரியர்கள் காலிப்பணியிடம் : பள்ளிக்கல்வித்துறை சேகரிப்பு

விருதுநகர் : தமிழகத்தில் உள்ள உயர்நிலை,மேல் நிலைப்பள்ளிகளில் காலிப்பணியிட விபரங்களை பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது. தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிøப்பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்து விபரங்களை உடனடியாக வழங்கும்படி பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது.

ஆண்டு தோறும் ஆர்.எம்.எஸ்.ஏ., மூலமாக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பாட வாரியாக ஆசிரியர்களும், ஒரு தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உடனடியாக ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்ப முடியாததால் அந்த இடங்களில் அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்களை மாற்றம் செய்து பள்ளிகள் செயல்படுத்தப்பட்டன. போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த கல்வியாண்டில் இந் நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை முன் கூட்டியே திட்டமிடப்படவுள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு உடன் வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.காலிப்பணியிட விபரங்களை உடனடியாக பள்ளி தலைமையாசிரியர்களிடம் பெற்று பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்படவுள்ளது.

May 18, 2012

பொறியியல் கலந்தாய்வுக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொதுக் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் எளிதாக இந்த ஆன்லைன் விண்ணப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன்பு பொதுப் பிரிவினராக இருப்பின் ரூ.500, எஸ்சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவு மாணவர்களாக இருப்பின் ரூ.250க்கான டிடியை எடுத்து கையில் வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் டிடி எண்ணை குறிப்பிட வேண்டியது அவசியமாகும்.
மேலும், குறிப்புகள் மற்றும் தகவல்களை மாணவர்கள் முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் விண்ணப்ப எண், பதிவு எண்ணை குறித்துக் கொள்ள வேண்டும். இது கலந்தாய்வின் போது தேவைப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க...

பட்டதாரி, முதுகலை பட்டதாரி , உயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமையாசிரியர் பதவியுயர்வு பட்டியல் மற்றும் ஆசிரிய பயிற்றுனர் to பட்டதாரி, முதுகலை பட்டதாரி to BRC மேற்பார்வையாளர் பணி மாறுதல் பட்டியல்

Conversion:
HM Panel

ஆசிரியர்கள் கவனத்திற்கு :
இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியல் தங்கள் வசதிகாக 
வெளியிடப்படுகிறது.முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்கள் 
சுய விவரத்தில் திருத்தம் இருந்தாலோ அல்லது உங்கள் பெயர் 
விடுபட்டு இருந்தாலோ அதற்கு இந்த இணையதளம்  பொறுப்பல்ல 
என்பதை தெரிவித்து கொள்கிறோம். இது முற்றிலும் சேவை அடிப்படையில் 
வழங்கப்படுகிறது .இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியல் தற்காலிகமானதே
என்றும் திருத்தம்,சேர்த்தல் மற்றும் நீக்கலுக்கு பிறகு பள்ளிக்கல்வி த்துறையால் 
வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். திருத்தப்பட்ட பட்டியல் பதவி உயர்வு 
கலந்தாய்வு அன்று ஒட்டப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பதவி உயர்வு கலந்தாய்வு 
தேதி பின்னர் நம்முடைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

Latest TET Model Question Papers


முதன்மைக் கல்வி அலுவலர்கள் 20 பேர் மாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில், 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றப் பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும், சி.இ.ஓ.,க்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் சி.இ.ஓ.,க்கள், பணியிட மாற்றப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ரெகுலர் (பள்ளிக் கல்வித்துறை) சி.இ.ஓ., பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் சி.இ.ஓ., பணியிடங்களில், 23 இடங்கள் காலியாக இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொறியியல் கல்லூரிகளின் விவரத்தை அறியலாம்

தமிழகத்தில் தற்போது பல மாணவ, மாணவிகளின் கேள்வியே, எந்த பொறியியல் கல்லூரி சிறந்தது, எந்தெந்த கல்லூரியில் என்னென்னப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
எதைத் தேர்வு செய்வது என்பதுதான். இந்த கேள்விகளுக்கு விடை காணும் வகையில், அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் மாவட்ட வாரியாக அமைந்துள்ள கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள வசதிகள், படிப்புகள் குறித்து அனைத்துத் தகவல்களும் விரிவாக அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், தாங்கள் தேர்வு செய்யும் பொறியியல் கல்லூரியில் உள்ள வசதிகள் குறித்து இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

11, 12ம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான உதவித் தொகை.

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 11, 12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை எடுத்துப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை அளிப்பதற்கான தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு ஜுலை 29ம் தேதி நடைபெற உள்ளது.இத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.20,000 முதல் 25,000 வரை உதவித் தொகையாக வழங்கப்படும்.
இந்த உதவித் தொகை பெற அபராதம் இல்லாமல் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்துவிட்ட நிலையில், ஜுன் 15ம் தேதி வரை ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்கலாம். ஜுலை 15ம் தேதி வரை ரூ.200 அபராதம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.இயற்பியல், வேதியியல், கணிதம்/உயிரியியல், ஆங்கிலும் ஆகியப் பாடப்பிரிவுகளில் இருந்து 200 ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். 200 மதிப்பெண்களுக்கு ஆன்லைன் முறையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு 2 மணி நேரம் வழங்கப்படும்.மேலும் தகவல்களை அறிந்து கொள்ள www.nest.net.in  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில் பி.எட். விண்ணப்பிக்க...

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட், படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 4 ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பி.எட், படிப்பில் 1000 இடங்களுக்கு (500 தமிழ்வழி, 500 ஆங்கிலவழி) ஜூலை 27 ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை11.

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம். 
1. சங்க காலத்தில்  தலைசிறந்து விளங்கிய சோழ மன்னர் - கரிகாலன்
2. வேப்பம் பூ மாலையை அணிந்தவர்கள் - பாண்டியர்கள்
3. நீர் வழி போக்குவரத்துக்கு உதவுவது - பரிசல்

May 17, 2012

TET - 2012 தேர்வில் வெற்றிபெற நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது...

தமிழக அரசு நடத்தும் 2012ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்விற்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. இந்த நேரத்தில், நீங்கள், குறைந்தபட்சம் அடிப்படை தயார்படுத்தலையாவது முடித்திருக்க வேண்டும்(அதாவது தேர்வுக்குப் படித்தல்).
இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம் என்ற நிலையில், அதற்கான உத்தரவாதத்தை பெறுவது எப்படி என்பதை அறிதல் வேண்டும். தேர்வுக்கான கேள்வித்தாள் எவ்வாறு இருக்கும்? என்னால், 150 கேள்விகளுக்கு வெறும் 90 நிமிடங்களில் பதிலளிக்க முடியுமா? Multiple choice கேள்விகள் தேர்வுகளுக்காக நான் பயிற்சி எடுக்க வேண்டுமா?

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை10.

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை9.

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 30-ல் மதிப்பெண் சான்றிதழ்


சென்னை, மே 16: பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 30-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார்.
 தொடர் மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

Admission to M.B.B.S / B.D.S Degree Course 2012 - 2013 Session.

Directorate of Medical Education
Chennai
Admission to  M.B.B.S / B.D.S Degree Course 2012 - 2013 Session

Action Research - Model


Action Research - Model in Tamil


Action Research - Model in English

செயல் வழிக் கற்றல் (ABL) பயிற்சி

 புதிய   செயல் வழிக் கற்றல் அட்டைகளை (ABL) அமல்படுத்த  ஆசிரிய பயிற்றுனார்கள் , உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் , மேற்பார்வையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு முதல் கட்டமாக 15 மாவட்டங்களுக்கு  23.5.12 மற்றும் 24.5.12 பயிற்சி அளிக்கப்படுகிறது.  
 

Trimester Latest Text Books (revised in 2012) for the Classes : 1 to 10 avl

Welcome to TEXTBOOKS ONLINE !
Textbooks published by the 
Department of School Education, Govt. of Tamil Nadu, India
are hosted here for
viewing purpose.
© Government of Tamil Nadu
 
What's New ? Latest Text Books (revised in 2012) for the Classes : 1 to 10
               
Class 1 Class 2 Class 3 Class 4 Class 5 Class 6
           
Class 7 Class 8 Class 9 Class 10 Class 11 Class 12
           
    Diploma in Teacher Education - First Year Diploma in Teacher Education - Second Year

May 16, 2012

320 பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள்


வரும் கல்வியாண்டில், 320 பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில், தலா இரண்டு ஆங்கில வழி வகுப்புகள் துவக்க, பள்ளிகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

அறிவிப்பு
:பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் சிவபதி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில், வரும் கல்வியாண்டு முதல், ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளில், தலா இரண்டு ஆங்கிலவழிப் பிரிவு வகுப்புகள் துவங்கப்படும். முதற்கட்டமாக, மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவு வகுப்புகள் துவக்கப்படும் என்ற அறிவிப்பும் இடம் பெற்றது.

முப்பருவ கல்வி முறை: ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி


முப்பருவ தேர்வு முறை பாடத்திட்டம் தொடர்பாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு தொடங்கும்.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக புத்தக சுமையை குறைக்க திட்டமிட்டு, முப்பருவ தேர்வு முறை பாடத்திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இது வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மேலும் முழுமையான தொடர் மதிப்பீட்டு முறை பின்பற்றப்பட உள்ளது.

பொது மாறுதல் கலந்தாய்வு: பள்ளிவாரியாக உபரி ஆசிரியர் காலியிடங்கள் விபரம் சேகரிப்பு


ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான விண்ணப்பங்கள் பெறுவதை நிறுத்தியுள்ள நிலையில், பள்ளிவாரியாக உபரி ஆசிரியர், காலியிடங்கள் தொடர் பான விபரங்கள் சேகரிக்கும் பணியில் கல்வித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதை அடுத்த உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்க கல்வித் துறை இயக்குனரால் அறிவுறுத்தப்பட்டது. உடனடியாக விண்ணப்பம் பெறுவது நிறுத்தப்பட்டது. பெறப்பட்ட விண்ணப்பங்களும் கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை.

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை.

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: அறிவியல் வினா - விடை.

அறிவியல்
உலகில் உள்ள மக்கள் பல்வேறு அலகு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். FPS  முறை (அடி, பவுண்டு, விநாடி) CGS முறை (செண்டிமீட்டர், கிராம், விநாடி)  மற்றும் முறை (மீட்டர், கிலோகிராம், விநாடி) என்று பயன்படுத்தி வந்தனர்.
1971 -ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்துலக அலகு (SI) முறையாகும். (The System International 'D' units) இதன் சுருக்கமே SI ஆகும். அனைத்துலக அலகு முறை ஏழு அடிப்படை அலகுகளையும், இரு துணை அலகுகளையும் கொண்டுள்ளது.

பொதுப் பாடத்திட்டமாக பெயர் மாறிய சமச்சீர் பாடத்திட்டம்!

சமச்சீர் பாடத்திட்டம் என்ற பெயரை, பொது பாடத்திட்டம் என மாற்றி, முப்பருவத் தேர்வு முறையிலான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
கடந்த கல்வியாண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. புதிய புத்தகங்கள் அச்சிடப்பட்டிருந்த நிலையில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.

அரசாணை 23ஐ நடைமுறைப்படுத்த தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண். 12956 / இ4 / 2011, நாள். 15.5.12. 
அரசாணை எண். 23 ல் தெரிவித்துள்ளப்படி தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

தொடக்கக்கல்வி -ஆங்கில வழி வகுப்புகள்- அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இணைப்பிரிவுகள் தொடங்க பள்ளி பெயர் பட்டியல் கோரப்பட்டுள்ளது.


தமிழகத்தில் இயங்கி வரும் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு 10 பள்ளிகள் வீதம்   320 பள்ளிகளில் 2012 - 2013 ஆம்  கல்வியாண்டில்  ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் சுமார் 160 பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் இயங்கும் பிரிவுகளுக்கு இணையாக 
ஆங்கிலவழி இணைப்பிரிவுகள் தொடங்கி நடத்திட அரசால் அனுமதி 
வழங்கப்பட்டுள்ளது.

May 10, 2012

மொபைலில் பொது தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரென்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் உங்கள் மொபைலில் பெற 

இங்கே கிளிக்  செய்க‌ 

10th & 12th ரிசல்ட் உங்கள் மொபைலில் பெற

பிளஸ் டு பாடபுத்தகங்கள் மே 10 ம் தேதி முதல் பள்ளிகளுக்கு வழங்கப்படும் .

பிளஸ் டு பாடபுத்தகங்கள் மே 10 ம் தேதி முதல் பள்ளிகளுக்கு வழங்க தமிழ்நாடு பாட நூல் கழகம் ஏறப்பாடு செய்துள்ளது.தனியார் பள்ளிகள் ஒருங்கிணைந்து, பாடப் புத்தகங்களைப் பெற்று, பின்னர் குறிப்பிட்ட மையத்தில் வைத்து பிரித்து எடுத்துக் கொள்ளும் முறை, பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்டது. இந்த முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், இதே முறையில், பிளஸ் 2 பாடப் புத்தகங்களும் வினியோகிக்கப்படும். நாளை, 10ம் தேதி முதல், பிளஸ் 2 பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு வினியோகிக்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே, தேவையான புத்தகங்கள், மாவட்டங்களுக்கு சென்றுவிட்டதால், அவற்றை, தங்கள் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வினியோகிக்கும் பணியை, முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்வர். பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியானபின், புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்களுடன் இணைந்து, பாடப் புத்தகங்களை பெற ஏற்பாடு செய்து கொள்ளலாம். சென்னையில், அதிகளவில் மெட்ரிக் பள்ளிகள் உள்ளதால், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தனியார் பள்ளிகள் ஒருங்கிணைந்து, பாடப் புத்தகங்களை பெற்று, பின்பு பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். 12, 13 ஆகிய சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும், பாடநூல் கிடங்குகள் இயங்கும்.

கட்டணம் உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் வெளியீடு!


சென்னை ஐகோர்ட்டால், 15 சதவீதம் கட்டணம் உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட, 384 தனியார் பள்ளிகளின் பெயர் பட்டியலை, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகள் மட்டுமே, 15 சதவீத கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனவும், மற்ற பள்ளிகள் உயர்த்தக்கூடாது எனவும் துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை 8

தொடக்கக் கல்வி - ஆசிரியர் பணியிடங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.

அரசாணை  எண். 102 பள்ளிக்கல்வித் துறை நாள்.20.04.2012
ஆசிரியர் பணியிடங்கள் இடைநிலை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி தலைமை ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகிய 4526 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.01.2012 முதல் 31.12.2014 வரை 3 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. இப்பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அவரவர்கள் பதவிகேற்ப ஏற்ற முறையில் ஊதியம், அகவிலைப்படி மற்றும் இதர படிகள் பெற தகுதியுடையவராவர்கள்.

May 9, 2012

ஆசிரியர், அரசு ஊழியருக்கு புதிய காப்பீடு திட்டம் - அரசாணை வெளியீடு

ஆசிரியர், அரசு ஊழியருக்கு தமிழக அரசு புதிய காப்பீடு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டத்தை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வந்தது. இதில் மாதம் பிரிமியமாக ரூ.25 ம், இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்தது.


தற்போது அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தில் மாத பிரிமியமாக ரூ.75 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் காப்பீடு தொகையை ரூ. 4 லட்சமாக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகாலம் என்பதை நான்கு ஆண்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.


இத்திட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், எட்டு லட்சம் பேரும், பொதுத்துறை நிறுவனங்களான அரசு போக்குவரத்து துறை, மின் வாரியம் உட்பட அனைத்து நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் பயன் பெறுவர்.


எந்தெந்த நோய்கள் காப்பீடு திட்டத்தில் வரும், எந்த ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று கொள்ளலாம் என்பது குறித்த விபரங்களை அரசு விரைவில் வெளியிடவுள்ளது.



ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை 7.

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம். 
1. உலகின் மிகப்பழமையான புகழ்பெற்ற கோட்டை - ராட்லன்
2. இந்தியாவின் முதல் மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட ஆண்டு - 1664

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள், 11ம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூன் முதல் வாரத்தில், தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
ஏப்ரல் 4 முதல், 23ம் தேதி வரை நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள், கடந்த 26ம் தேதியில் இருந்து, 66 மையங்களில் நடந்து வருகின்றன. 40 ஆயிரம் ஆசிரியர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், 11ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வழக்கமாக மே இரண்டாவது வாரத்தில் வெளியாகும். ஆனால், இம்முறை பிளஸ் 2 தேர்வு முடிவுகளே தள்ளிப் போயிருப்பதால், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் 20 நாட்கள் வரை தள்ளிப்போகின்றன.
இந்த ஆண்டு, ஜூன் முதல் வாரத்தில் தான் முடிவுகள் வெளியாகும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூன் முதல் தேதியன்றே பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பிளஸ் 1 சேர்க்கை மட்டும் தாமதமாகவே நடைபெற உள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை6

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை5

ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை 4

சாதி, வருமான, இருப்பிட சான்றுகளை 6ம் வகுப்பிலேயே பெறலாம்

சென்னை: எதிர்கால சிரமங்களைத் தவிர்க்க, 6ம் வகுப்பிலேயே மாணவர்களுக்கு சாதி, இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக, சட்டசபையில் முதல்வர் தெரிவித்ததாவது: பள்ளி மாணவர்கள் அரசு விடுதிகளில் தங்கிப் பயில்வதற்கும், பல்வேறு வகையான உதவித் தொகைகளைப் பெறுவதற்கும், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கும், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் போன்றவை தேவைப்படுகின்றன.
இத்தகைய சான்றிதழ்களை தேவையான நேரத்தில் பெறுகையில், மாணவர்களுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, அவர்களின் 6ம் வகுப்பிலேயே, இத்தகைய சான்றிதழ்களை பெறும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படும்.
இதன்மூலம், மாணவர்கள் அந்த ஆண்டிலேயே மேற்கூறிய சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய திட்டத்தின் மூலம், 6ம் வகுப்பில் படிக்கும் சுமார் 12 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

ஜூலை 2ம் தேதி மருத்துவக் கல்வி கலந்தாய்வு.

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு, ஜூலை 2ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழுவின் செயலர், விரைவில் நியமிக்கப்படுவார் என, சுகாதாரத்துறைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கூறினார்.

பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு - ஜூலை 2-ம் தேதி தொடக்கம்.


பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது.
எனினும் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விரும்பும் பொதுப் பிரிவு கலந்தாய்வு, வழக்கம்போல் எம்.பி.பி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி தொடங்கி முடிந்த பிறகு, ஜூலை 9-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.